ரஸ்மஸ் லெர்டெர்ஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஸ்முஸ் லெர்டோர்ஃப்
பி.ஹெச்.பி நிரலாக்க மொழியை உருவாக்கியவர்
பிறப்பு22 நவம்பர் 1968 (1968-11-22) (அகவை 55)
கெகெர்டார்சுவக், கிறீன்லாந்து
படித்த கல்வி நிறுவனங்கள்வாட்டர்லூ பல்கலைக்கழகம்
பணிதனிச்சிறப்புமிக்க பொறியாளர், எட்சி
வலைத்தளம்
http://lerdorf.com

ராஸ்முஸ் லெர்டோர்ஃப் (ஆங்கில மொழி: Rasmus Lerdorf, பிறப்பு: 22 நவம்பர் 1968) ஒரு டானிய - கனடிய நிரலாளர். அவர் பி.ஹெச்.பி மொழியை உருவாக்கி அதன் முதல் இரண்டு பதிப்புகளை எழுதியும் ஜிம் வின்ஸ்டட் (பின்னாளில் blo.gsஐ உருவாக்கியவர்), ஸ்டிக் பாக்கன், ஷேன் கராவியோ, ஆண்டி குட்மன்ஸ் ஸெயேவ் சூரஸ்கி ஆகியோரைக் கொண்ட குழுவினருடன் சேர்ந்து பங்களித்துப் பிந்தைய பதிப்புக்கள் உருவாகக் காரணமாகவும் இருந்தார். இப்போதும் இத்திட்டத்திற்கு பங்களித்து கொண்டு இருக்கிறார்.

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

அவருடைய குடும்பம் 1980ஆம் ஆண்டு டென்மார்க்லிருந்து கனடாவிற்கு குடியெறியது. பின்னர் 1983ஆம் ஆண்டு கிங் நகரம் ஒண்டாரியோ நகரத்துக்கு இடம் பெயர்ந்தது.[1]

வேலை[தொகு]

செப்டம்பெர் 2002 ல் இருந்து நவம்பர் 2009 வரை யாஹூ நிறுவனத்தில் உள்கட்டமைப்பு வடிவமைப்பு பொறியாளராக பணி புரிந்து வந்தார். 2010 ஆம் ஆண்டு வீபே நிறுவனத்தில் அப்ளிகேசன் ப்ரொக்ரமிங் இன்டர்பேஸ் தயாரிப்பில் இணைந்தார். பின்னர் இட்ச்ய் ல் 2012 லும் ஜலச்டிக் ந்றுவனத்தில் 2013 ஆம் ஆண்டு மூத்த ஆலோசகர் ஆகவும் பணி புரிந்தார்.

விருதுகள்[தொகு]

2003ஆம் ஆண்டு மாசாசூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தின் டெக்னாலச்சி ரிவ்யூ TR100 இனால் உலகின் தலைசிறந்த 100 கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

சான்றுகள்[தொகு]

  1. "Rasmus Lerdorf" (PDF). K.C.S.S. Alumni Association. Archived from the original (PDF) on 2013-10-29. பார்க்கப்பட்ட நாள் 2013-02-21.
  2. "2003 Young Innovators Under 35". டெக்னாலச்சி ரிவ்யூ. 2003. பார்க்கப்பட்ட நாள் August 15, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஸ்மஸ்_லெர்டெர்ஃப்&oldid=3569498" இலிருந்து மீள்விக்கப்பட்டது