ரஸியா பட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரஸியா பட்
பிறப்பு(1924-05-19)19 மே 1924
வசிராபாத், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
இறப்பு4 அக்டோபர் 2012(2012-10-04) (அகவை 88)
லாகூர், பஞ்சாப் (பாக்கிஸ்தான்)
தொழில்எழுத்தாளர், நாடக எழுத்தாளர், புதின ஆசிரியர்
தேசியம்பாக்கித்தானியர்
வகைபுனைகதை
கருப்பொருள்சோசலிசம், காதல்

ரஸியா பட் ( Razia Butt ) பாக்கித்தானைச் சேர்ந்த உருது புதின ஆசிரியரும், நாடக ஆசிரியரும் ஆவார். 1960கள் மற்றும் 1970களில் பிரபலமான புனைகதை எழுத்தாளர்களில் ஒருவரான இவர், வீட்டு வாசகர்களிடையே தனது பிரபலத்தின் காரணமாக ஆங்கில எழுத்தாளர் பார்பரா கார்ட்லேண்டுடன் அடிக்கடி ஒப்பிடப்படுகிறார். [1] [2] [3]

இவரது சில படைப்புகள் பானோ உட்பட தொலைக்காட்சி தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. [4]

பின்னணி[தொகு]

ரஸியா நியாஸ் 19 மே 1924 இல் வசிராபாத்தில் பிறந்தார் [5] தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை பெசாவரில் கழித்தார். [6]

தொழில்[தொகு]

இவர் 1940 ஆம் ஆண்டில் தனது பதின்ம வயதில் இருந்தபோது ஒரு இலக்கிய இதழில் முதலில் எழுத ஆரம்பித்தார்.[7] பின்னர் தனது முதல் வெளியிடப்பட்ட கதையான நைலா என்ற புதினத்தை உருவாக்கினார்.[8] இவர் வானொலி நாடகங்களையும் எழுதினார். நைலா, சைக்கா போன்ற திரைப்படங்களும், சைக்கா மற்றும் தஸ்தான் போன்ற தொலைக்காட்சித் தொடர்களும் இவரது புதினங்களை அடிப்படையாகக் கொண்டவை. [2] [9]

1946 இல் திருமணம் செய்துகொண்ட ரசியா பட், சில வருட இடைவெளிக்குப் பிறகு 1950களில் மீண்டும் எழுதத் தொடங்கினார். 51 புதினங்கள் மற்றும் 350 சிறுகதைகளை எழுதியுள்ளார். [10]

பிச்ரே லாம்ஹே என்ற சுயசரிதையையும் எழுதினார். [11] [12]

இறப்பு[தொகு]

நீண்டகால நோயால் பாதிக்கட்டிருந்த ரஸியா பட் லாகூரில் 4 அக்டோபர் 2012 அன்று இறந்தார். [13] [14]

சான்றுகள்[தொகு]

  1. "Popularity, literary finesse and some Urdu bestsellers". dawn.com. 2021-10-19.
  2. 2.0 2.1 عارف وقار بی بی سی اردو ڈاٹ کام، لاہور (1 January 1970). "BBC Urdu – فن فنکار – ناول نگار رضیہ بٹ انتقال کر گئیں". Bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 21 October 2012.
  3. Abbas Akhtar (18 May 2008). "Writer & Novelist Razia Butt in Brunch w/ Bushra P-3/5". Vidpk.com. Archived from the original on 8 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 21 October 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Dastaan: History on TV". Express Tribune. 2011-09-24.
  5. "Great Urdu novelist Razia Butt passes away aged 89". Samaa Tv. பார்க்கப்பட்ட நாள் 21 October 2012.
  6. "Razia Butt is no more". Paklinks.com. 5 October 2012. பார்க்கப்பட்ட நாள் 21 October 2012.
  7. Rayan Khan (July 10, 2011). Rasheed Butt: The life and times of a calligrapher, தி எக்சுபிரசு திரிப்யூன்
  8. عارف وقار بی بی سی اردو ڈاٹ کام، لاہور (1 January 1970). "BBC Urdu – فن فنکار – ناول نگار رضیہ بٹ انتقال کر گئیں". Bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 21 October 2012.عارف وقار بی بی سی اردو ڈاٹ کام، لاہور (1 January 1970). "BBC Urdu – فن فنکار – ناول نگار رضیہ بٹ انتقال کر گئیں". Bbc.co.uk. Retrieved 21 October 2012.
  9. Hasan, Taneeya (September 24, 2011). "Dastaan: History on TV". தி எக்சுபிரசு திரிப்யூன்.
  10. "Novelist Razia Butt passes away at 89". The News Tribe. 5 October 2012. Archived from the original on 9 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 21 October 2012.
  11. "Novelist Razia Butt is no more". Dawn.Com. 5 October 2012. பார்க்கப்பட்ட நாள் 21 October 2012.
  12. شائستہ جلیل، کراچی (4 October 2012). "مشہور ناول نگار رضیہ بٹ انتقال کرگئیں". Urduvoa.com. பார்க்கப்பட்ட நாள் 21 October 2012.
  13. "Novelist Razia Butt dies at 89". The Nation. 5 October 2012. பார்க்கப்பட்ட நாள் 21 October 2012.
  14. "Fiction writer Razia Butt dies". Central Asia Online. 5 October 2012. பார்க்கப்பட்ட நாள் 21 October 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஸியா_பட்&oldid=3718906" இலிருந்து மீள்விக்கப்பட்டது