ரத்னமாலா சவனுர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரத்னமாலா தரேஷ்வர் சவனுர் (பிறப்பு 1950) முன்பு ஜனதா தளம் கட்சியிலும் தற்போது (மதச்சார்பற்ற) ஜனதா தளம் கட்சியிலும் செயல்படும் இந்திய அரசியல்வாதி ஆவார்.11 வது மக்களவை உறுப்பினராக இருந்த இவர் குஜ்ரால் அமைச்சரவையில் திட்டமிடல் மற்றும் அமலாக்கத்துறை இணை அமைச்சராக பணியாற்றினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சவனூர் கர்நாடகாவின் பெல்காம் மாவட்டத்தில் 3 திசம்பர் 1950 இல் பிறந்தார், ஸ்ரீ கோபால்ராவ் மசாஜி போலின் மகளான இவர் கோலாப்பூரில் உள்ள சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப் பட்டம் பெற்றுள்ளார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

அவர் 12 மே 1974 இல் தரேஷ்வர் சவனூர் என்பவரை மணந்த அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Biographical Sketch of Member of XI Lok Sabha: Savanoor, Smt. Ratnamala". மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரத்னமாலா_சவனுர்&oldid=3743830" இலிருந்து மீள்விக்கப்பட்டது