ரதொவான் கராட்சிச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரடோவான் கராட்சிச் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ரதொவான் கராட்சிச்
Radovan Karadžić
Радован Караџић
மாஸ்கோவில் மார்ச் 3, 1994 இல் ரதொவான் கராட்சிச்
சுரூப்ஸ்கா குடியரசின் 1வது அதிபர்
பதவியில்
ஏப்ரல் 7 1992 – ஜூலை 19 1996
முன்னவர் புதிய பதவி
பின்வந்தவர் பில்ஜானா பிளாவ்சிச்
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 19, 1945 (1945-06-19) (அகவை 78)
மொண்டெனேகுரோ, யூகொஸ்லாவியா
தேசியம் சேர்பியர்
அரசியல் கட்சி சேர்பிய மக்களாட்சிக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) லில்ஜானா
படித்த கல்வி நிறுவனங்கள் சரயேவோ பல்கலைக்கழகம்
கொலம்பியா பல்கலைக்கழகம்
தொழில் மனநோய் மருத்துவர்
சமயம் சேர்பியப் பழமைவாதம்
இணையம் Human Quantum Energy

ரதொவான் கராட்சிச் (Radovan Karadžić, Радован Караџић, râdovaːn kâraʤiʨ; பிறப்பு: ஜூன் 19, 1945) ஒரு முன்னாள் பொஸ்னிய சேர்பிய அரசியல்வாதியும் போர்க்காலத் தலைவரும் ஆவார். இவர் போர்க்காலக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

மனநோய் மருத்துவராக பட்டம் பெற்ற இவர் பொசுனியா எட்சகோவினாவில் சேர்பிய மக்களாட்சிக் கட்சியை அமைத்தார். 1992 முதல் 1996 வரையில் சுரூப்ஸ்கா குடியரசின் அதிபராக இருந்தார்.

ஐநாவின் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தினால் போர்க் குற்றங்களுக்காகக் குற்ற்ம் சாட்டப்பட்டு 1996 ஆண்டு முதல் 2008 வரையில் தலைமறைவாக இருந்தார்[1]. 1992-1995 காலப்பகுதியில் இடம்பெற்ற பொஸ்னியப் போரின் போது பல்லாயிரக்கணக்கான பொஸ்னிய முஸ்லிம், மற்றும் குரொவேசியர்களின் படுகொலைகளுக்காக இவர் தேடப்பட்டு வந்தார்[2]. தலைமறைவாயிருந்த காலத்தில் இவர் பெல்கிறேட் நகரில் "டாக்டர் டிராகன் டாபிச்" என்ற பெயரில் மாறு வேடத்தில் தனியார் மருத்துவ நிலையம் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார்[3]. 2007 ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவின் வியென்னா நகரில் "பீட்டர் குளூமாச்" என்ற பெயரில் மருத்துவ விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வந்தார்[4].

கராட்ஜிச் ஜூலை 21, 2008 இல் பெல்கிறேட் நகரில் கைது செய்யப்பட்டார்[1].

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரதொவான்_கராட்சிச்&oldid=3226498" இருந்து மீள்விக்கப்பட்டது