பொசுனியா (பிரதேசம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பொஸ்னியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Approximate borders between Bosnia (marked light) and Herzegovina (marked dark)

பொசுனியா என்பது வரலாற்றுப்படியும் புவியியல்படியாகவும் நன்கு அறியப்பட்ட இன்றைய பொசுனியாவும் எர்செகோவினாவினது வடக்கு பிரதேசமாகும். இது பிரதானமாக அல்ப்சு மலைச்சார்ந்த பிரதேசத்தில் அமைந்துள்ளது. சாவா, டிரினா என்ற இரு நதிகள் இதன் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளை அமைக்கிறது. இதன் தெற்கு எல்லையாக எர்செகோவினா பிரதேசம் காணப்படுகிறது.

பொசுனியா சுமார் 41,000 ச.கி.மீ. அளவுடையதாகும் மேலும் இது இன்றைய பொசுனியாவும் எர்செகோவினாவினது பரப்பளவின் 80%த்தை பிடிக்க்கிறது. எர்செகோவினாவுக்கும் பொசுனியாவுக்குமிடையில் எல்லை ஒன்று கிடையாது.

இவ்விரு பிரதேசங்களும்(பொசுனியாவும் எர்செகோவினாவும்) கூட்டாக பொசுனியா என அழைக்கப்பட்டு வந்துள்ளன.

வரலாறு[தொகு]

பொச்சுனியா மத்திய காலத்தில் காணப்பட்ட 6 சேர்பிய மாகாணங்களில் ஒன்றாகும். அது பல அரசுகளின் ஆட்சியின் கீழ் காணப்பட்டது. 12 வது நூற்றாண்டிலிருந்து குயிலின் என்ற இனத்தவர்கள் இங்கு ஒரு சுதந்திர நாட்டை உருவாக்கினாகள். 1360களில் பொசுனிய இராச்சியம் இன்றைய எர்செகோவினா பிரதேசத்தையும் உள்ளடக்கி காணப்பட்டது. 1463-1878 காலத்தில் ஒட்டோமான் பேரரசின் கீழ் இது காணப்பட்டது. 1853 இல் ஆப்போதைய அரசிய மாற்றங்கள் காரணமாக இப்பிரதேசம் "பொசுனியாவும் எர்செகோவினாவும்" என்ற பெயரை பெற்றது.

படத்தொகுப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொசுனியா_(பிரதேசம்)&oldid=1471661" இருந்து மீள்விக்கப்பட்டது