ரஞ்சித்சிங் திசாலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரஞ்சித்சிங் திசாலே
ৰণজিত সিংহ মহাদেৱ ডিচলে Ranjitsinh Disale.jpg
ரஞ்சித்சிங் திசாலேவின் ஓவியம்
பிறப்புஆகத்து 5, 1988 (1988-08-05) (அகவை 33)
பரிதேவாடி, சோலாப்பூர் மாவட்டம், மகாராட்டிரா
தேசியம்இந்தியர்
பணிபள்ளி ஆசிரியர்
அறியப்படுவதுஉலக ஆசிரியர் பரிசு வென்றவர் [1]

ரஞ்சித்சிங் திசாலே (Ranjitsinh Disale) (பிறப்பு:5 ஆகஸ்டு 1988), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூட ஆசிரியரும், 3 டிசம்பர் 2020 அன்று வர்க்கி அறக்கட்டளை வழங்கும் 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள உலக ஆசிரியர் பரிசு வென்ற ஐந்தாவது நபர் ஆவார். [2] இவர் தனக்கு வழங்கப்பட்ட 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகையில், 50% தொகையை, போட்டியில் தன்னுடன் பங்கேற்ற 9 போட்டியாளர்களுக்கு, தலா 55,000 டாலர் வீதம் பகிர்ந்து அளித்தார்.[3][4]

கல்வி & தொழில்[தொகு]

மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பரிதேவாடி எனும் கிராமத்தில் பிறந்தவர் இரஞ்சித்சிங் திசாலே. பள்ளி இறுதித் தேர்வில் வென்ற இரஞ்சித்சிங் திசாலே ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தார்.[5]ஆசிரியர் பயிற்சி முடித்த இரஞ்சித்சிங் திசாலே உருவாக்கிய புதுமையான கற்பித்தல் படைப்புகளுக்கு நன்கு அறியப்பட்டவர். அவர் நிறுவிய கல்வி மற்றும் அறிவியல் ஆய்வகத்திலிருந்து, அறிவியல் பரிசோதனைகளை நிரூபிப்பது மற்றும் கியூ. ஆர். குறியீடுகளைக் கொண்டு முதன்மை வகை புத்தகங்களை படிப்பதற்கும், அவரது கிராமப்புற பள்ளி மாணவர்கள் ஆடியோ கவிதைகள், வீடியோ விரிவுரைகள், பணிகள் மற்றும் கதைகளின் இணைப்புகளைப் பெறவும் முடிந்தது.

பள்ளிப்பாட நூல்களை கியூ. ஆர். குறியீடுகள் மூலம் கிராமப்புற பள்ளி மாணவர்கள் அலைபேசி மூலம் எளிதாக படிக்கும், இவரது கருத்தாக்கத்த்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு ஏற்றுகொண்டு பள்ளிப்பாட நூல்களை படிக்கும் முறையை நடைமுறைப்படுத்தினர்.[5][6]இவரது கிராமத்தில் சிறுமிகளின் திருமணங்களை ஒழிப்பதற்கும், சிறுமிகளின் கல்வியை ஊக்குவிப்பதற்கும் அவர் பிரச்சாரம் செய்தார்.[5]

விருதுகள்[தொகு]

ஆண்டு விருதின் பெயர் முடிவு விருது அளிப்பவர் Ref.
2016 புதுமையான ஆய்வாளர் வெற்றியாளர் இந்திய அரசு
2018 புதுமைப்பித்தன் விருது வெற்றியாளர் தேசிய புதுமையாளர்கள் அறக்கட்டளை, இந்தியா
2020 உலக ஆசிரியர் பரிசு வெற்றியாளர் வர்க்கி அறக்கட்டளை [7][8][9]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சித்சிங்_திசாலே&oldid=3076103" இருந்து மீள்விக்கப்பட்டது