ரசனா பண்டாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரசனா பண்டாரி
Rashna Bhandari
தேசியம்இந்தியர்
பணியிடங்கள்ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரி
கல்வி கற்ற இடங்கள்இந்திய அறிவியல் நிறுவனம், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரி, ராக்பெல்லர் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஉயிரியல், உயிரணு சமிக்கை கடத்தல்

ரசனா பண்டாரி (Rashna Bhandari), இந்தியாவில் ஐதராபாத்தில் உள்ள டி. என். ஏ. கைரேகை மற்றும் ஆய்ந்தறிதல் மையத்தில் உயிரணு சமிக்கை ஆய்வகத்தின் தலைவராக உள்ளார். உடலியல் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் இனோசிட்டால் பைரோபாசுபேட்களின் பங்கைப் புரிந்துகொள்வதில் குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து, உயிரியல் அமைப்புகளில் சமிக்ஞை கடத்துதல் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டு வருகிறார் பண்டாரி.

கல்வி[தொகு]

பண்டாரி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் மனித உயிரியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். இதைத் தொடர்ந்து இந்திய அறிவியல் நிறுவனத்தில் உயிரியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார்.[1]

தொழில்[தொகு]

பண்டாரி 2008-ல் டி. என். ஏ. கைரேகை மற்றும் நோயறிதல் மையத்தில் அறிவியலாளராக ஆய்வுப்பணியில் சேர்ந்தார்.

இந்திய அறிவியல் நிறுவனத்தில் தனது முனைவர் பட்டத்திற்குப் பிறகு, பண்டாரி சந்தியா ஸ்ரீகாந்த் விசுவேசுவரியாவுடன் சவ்வு-பிணைக்கப்பட்ட குவானைலைல் சைக்லேஸ், ஜி. சி. சி. மூலம் சமிக்ஞை கடத்துதலில் பணியாற்றினார். இது குடல் சவ்வு முழுவதும் திரவம் மற்றும் அயனி சமநிலையினைப் பராமரிப்பதில் ஈடுபட்டுள்ளது.[2]

2001ஆம் ஆண்டில், பண்டாரி, பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஜான் குரியன் ஆய்வகத்தில், உயிரணு சமிக்கையில் ஈடுபட்டுள்ள புரதங்களின் கட்டமைப்பு உயிரியல் மற்றும் உயிர்வேதியியல் ஆகியவற்றில் பணிபுரிய ஒரு முனைவர் பட்ட பிந்தைய ஆய்வாளராகச் சேர்ந்தார்.[2] 2003-ல், பண்டாரி பால்ட்டிமோரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பள்ளிக்கு இடம்பெயர்ந்தார். இங்கு அவர் சாலமன் ஸ்னைடருடன் இணைந்து இனோசிட்டால் பைரோபாசுபேட்டுகளின் சமிக்ஞை செய்யும் மூலக்கூறுகளாகப் பங்காற்றுவதைப் புரிந்துகொள்வதில் பணியாற்றினார்.[2]

2015-ல், பண்டாரி தலைமையிலான குழு, குறைந்த அளவு ஐபி7 கொண்ட எலிகள் இரத்தம் உறைவதைக் குறைப்பதைக் கண்டறிந்தது. ஐபி7-ன் போதிய அளவுகள் பாலிபாஸ்பேட் எனப்படும் மற்றொரு பாஸ்பேட் நிறைந்த மூலக்கூற்றைக் குறைக்க வழிவகுத்தது (ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பாஸ்பேட் குழுக்களின் நீண்ட சங்கிலி). பாலூட்டிகளில், பாலிபாசுபேட் முக்கியமாக இரத்தத்தட்டுகளில் காணப்படுகிறது. இவை உருவாகும்போது இரத்தக் கட்டிகளை வலுப்படுத்த உதவுகிறது. இரத்தத்தட்டுகளுக்குள் இருக்கும் பாலிபாசுபேட்டுகள் உறைதலின் போது உடைந்துவிடும். இந்த பாலிபாசுபேட்டுகள் மற்றும் பிற கூறுகள் உறைவிற்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கப் பொருட்களை வெளியிடப்படுகின்றன. ஐபி7 அளவைக் குறைப்பது, இரத்த உறைதலைக் குறைப்பதன் மூலம் பக்கவாதம் அல்லது மாரடைப்பைத் தடுப்பதில் சாத்தியமான பயன்பாடுகளைக் கொண்டிருக்கலாம்.[3]

லட்சியம் வெற்றிக்கு வழிவகுக்கும், பாலினம் அல்ல என்று பண்டாரி நம்புகிறார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "CDFD Profile - Rashna Bhandari". பார்க்கப்பட்ட நாள் 16 July 2016.
  2. 2.0 2.1 2.2 "Fellow Profile". பார்க்கப்பட்ட நாள் 16 July 2016."Fellow Profile". Retrieved 16 July 2016.
  3. "Small molecule with a huge potential". http://www.thehindu.com/sci-tech/science/small-molecule-with-a-huge-potential/article6909412.ece. பார்த்த நாள்: 21 June 2018. 
  4. "In media". Archived from the original on 16 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரசனா_பண்டாரி&oldid=3681131" இலிருந்து மீள்விக்கப்பட்டது