ரங்கராஜ் பாண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரங்கராஜ் பாண்டே
பிறப்பு16 நவம்பர் 1975 (1975-11-16) (அகவை 45)
பீகார் மாநிலம், பக்சரில்
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
பணிமுன்னாள் தலைமை செய்தி ஆசிரியர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1999–2018
குறிப்பிடத்தக்க படைப்புகள்டவுட் தனபாலு,
ஆயுத எழுத்து,
கேள்விக்கென்ன பதில்,
மக்கள் மன்றம்

ரங்கராஜ் பாண்டே (ஆங்கில மொழி: Rangaraj Pandey), இந்தியாவிலுள்ள ஓர் ஊடகவியலாளர், நடிகர் ஆவார். தினமலர், தந்தி தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் பணிபுரிந்தவர். தந்தையின் பெயர் ரகுநாதாச்சாரியர்.[1]. பல்துறை குறித்து, பல்துறை அறிஞர்களுடன் விவாதம் செய்யும் ஆயுத எழுத்து எனும் சிறப்பு நிகழ்ச்சியும், பல்துறை ஆளுமைகளை நேர்காணல் கண்டு அவர்களின் செயல்பாடுகளில் உள்ள உண்மைத் தன்மைகள் குறித்து, பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்தும் கேள்விக்கென்ன பதில் எனும் நிகழ்ச்சியும், மக்கள் முன்னிலையில் இரு அணிகளுடன் விவாதிக்கும் மக்கள் மன்றம் நிகழ்ச்சியும் இவரின் குறிப்பிடத்தக்க பணியாகும். இவர் டிவி நிகழ்ச்சியோடு மட்டுமல்லாமல் கல்வி நிலையங்கள் மற்றும் பொது மேடைகளில் பேச்சாளராகவும் கலந்து கொள்கிறார்.[2]

இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு பள்ளியில்தான் தனது பள்ளி படிப்பைத் தொடங்கியுள்ளார். பிறகு தமிழின் மீதிருந்த ஆர்வத்தால், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து  முதுகலை தமிழ் படித்தார். 1999 இல் கல்லூரி படிப்பை முடித்த பிறகு தினமலர் நாளிதழில் வேலைக்கு சேர்ந்தார். 2012 முதல் 2018 டிசம்பர் வரை தந்தி தொலைக்காட்சியில் தலைமை செய்தி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.[3]

2019 ஆம் ஆண்டில் அஜித்குமாருடன் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார்.[4]

விருதுகள்[தொகு]

ஆண்டு விருது விருதளித்தோர்
2018 சிறந்த தொகுப்பாளருக்கான விருது(The Most Talked About Host Award) கலாட்டா நட்சத்திர விருதுகள்[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.veethi.com/india-people/rangaraj_pandey-profile-5482-22.htm
  2. http://www.tamil247.info/2017/11/rangaraj-pandey-short-history.html
  3. "‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்". விகடன். https://www.vikatan.com/news/tamilnadu/144369-senior-journalist-rangaraj-pandey-has-quits-editor-chief-in-thanthi-tv.html. பார்த்த நாள்: 17 டிசம்பர் 2018. 
  4. Upadhyaya, Prakash (2019-03-13). "Nerkonda Paarvai: Journalist Rangaraj Pandey to play this role in Ajith-starrer" (english).
  5. "Rangaraj Pandey winning Most Talked about host". பார்த்த நாள் 17 December 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரங்கராஜ்_பாண்டே&oldid=3018803" இருந்து மீள்விக்கப்பட்டது