யோசேபா அலோமாங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோசேபா அலோமாங்குYosepha Alomang
தேசியம்இந்தோனேசியர்
அறியப்படுவதுசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2001)

யோசேபா அலோமாங்கு (Yosepha Alomang) இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு சுற்றுச்சூழல் செயற்பாட்டாளராவார். மாமா யோசெஃபா அலோமாங்கு என்ற பெயராலும் இவர் அழைக்கப்படுகிறார். பப்புவா மாகாணம் பூமியில் உயிரியல் ரீதியாக வேறுபட்ட பன்முகத்தன்மை கொண்ட இடங்களில் ஒன்றாகும்.[1] இங்கு மழைக்காடுகளும் மிகப்பெரிய தங்கம் மற்றும் தாமிரச் சுரங்கங்களும் உள்ளன.

முப்பது ஆண்டு காலமாக மழைக்காடுகளை அழித்தல், ஆறுகளை மாசுபடுத்துதல், உள்ளூர் மக்கள் சமூகத்தை இடம்பெயரச் செய்தல் போன்றவற்றுக்கு காரணமாக இருந்த மிகப்பெரிய சுரங்க நிறுவனமான பிரீபோர்டு-மக்மொரனின் சுரங்க நடைமுறைகளை எதிர்க்க தனது சமூகத்தை ஒழுங்கமைத்த முயற்சிகளுக்காக 2001 ஆம் ஆண்டு இப்பெண்மணிக்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Goldman Environmental Prize: Yosepha Alomang பரணிடப்பட்டது அக்டோபர் 23, 2007 at the வந்தவழி இயந்திரம் (Retrieved on November 10, 2007)
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோசேபா_அலோமாங்கு&oldid=3857056" இலிருந்து மீள்விக்கப்பட்டது