யோகா-வேதாந்தா வன மன்றம்
யோகா-வேதாந்தா வன மன்றம் (Yoga-Vedanta Forest Academy) என்ற பள்ளி இறைநிலை வாழ்க்கை சமூகம் சார்ந்த பள்ளியாகும். இப்பள்ளியானது, சிவானந்தா ஆசிரமத்திற்குள் ரிசிகேசை அமைவிடமாகக் கொண்டுள்ளது. இதன் முக்கிய நோக்கமானது, யோகக் கலை கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்காக பயிற்சியளிப்பதோடு அல்லாமல், நடைமுறை ஒழுக்கத்தினை தனிப்பட்ட மற்றும் மனித நல்வாழ்விற்கான தொடர்பினை ஏற்படுத்துவதையும் கற்றுக் கொடுக்கிறது. படிப்பின் கடைசி இருமாதங்கள் இந்தியர்களுக்காக மட்டுமே பயிற்சி வழங்கப்படுகிறது.[1]
வரலாறு
[தொகு]யோகா வேடந்தா வன மன்றம், 1948 ஆம் ஆண்டில் சுவாமி சிவநந்தரால் நிறுவப்பட்டது, இங்கு யோகா பற்றிய முறையான பயிற்சியானது அங்கேயே தங்கியிருந்து பயிற்சி பெறுவோருக்கும், வெளியேயிருந்தும் வந்து படித்துக்கொள்ளும் விதமாகவும் இருவிதமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பயிற்சி பாடத்திட்டம்
[தொகு]இப்பயிற்சியில், வழக்கமான ஆன்மீக பயிற்சிகள் அளிக்கப்பட்டு, ஆஸ்ரமத்தில் உள்ள ஒவ்வொருவரும் இப்பயிற்சியினை பின்பற்றுகின்றனர். மாணவர்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து தினமும் செய்யக் கூடிய தியானம் மற்றும் மந்திரங்கள் ஓதுகின்றார்கள், இதைத் தொடர்ந்து கீழ்க்கண்ட பாடவாிசையில் சொற்பொழிவுகள் ஆற்றப்படுகின்றன.
- இந்திய தத்துவ வரலாறு: வேதங்கள், உபநிஷதங்கள், ஜைனியம், புத்தமதம், நியாயா, வைசீசிகா, சம்க்யா, யோகா, வேதாந்தா (சங்கரா, ராமானுஜா, மாதவா)
- மேற்கத்திய தத்துவ வரலாறு:
- சாக்ரடீஸ் (நல்லொழுக்கம் பற்றிய கருத்து)
- பிளேட்டோ (சிந்தனையின் கோட்பாடு)
- அரிஸ்டாட்டில் (மீமெய்யியல்(Metaphysics) மற்றும் காரணம்)
- செயின்ட் அகஸ்டின்
- செயின்ட் தோமஸ் அக்வினாஸ்
- கான்ட் (திறனாய்வுரைக்கான காரணம், நன்னடத்தை விதிமுறைகள்)
- ஹெகல்
- அர்சுனன் மனச்சோர்வு
- மூன்று யோகங்கள்: கர்மம், பக்தி மற்றும் பிறப்பு
- தீவி சம்பாத் மற்றும் அசுரி சம்பத்னா
- ஸ்வாத்மாவின் கருத்து
- ஷிபத்ராஜ்னாவின் இயல்பு
- கடவுள், உலகம் மற்றும் ஆன்மா
- உபநிஷதங்களின் படி
- பதஞ்சலி யோக சூத்திரங்கள்
- நாரத பக்தி சூத்திரங்கள்
- யோகாசனம், பிராணாயாமம் மற்றும் தியானம்
- கர்மம் யோகா
அன்றாட விரிவுரைகளுக்குப் பிறகு, மாணவர்கள் ஆசிரமத்தைச் சுற்றி கர்மம் யோகாவில் ஈடுபடுகின்றனர். மாணவர்கள் கய்யோகாசனப் பயிற்சி மற்றும் பிராணயாமப் பயிற்சியளிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "yoga clothes". Archived from the original on 2017-07-02. பார்க்கப்பட்ட நாள் 2017-07-19. Wednesday, 5 April 2017
வெளியிணைப்பு
[தொகு]- Yoga-Vedanta Forest Academy Prospectus பரணிடப்பட்டது 2016-08-03 at the வந்தவழி இயந்திரம்