உள்ளடக்கத்துக்குச் செல்

யூ-போரா கோபுரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூ-போரா கோபுரங்கள்
செப்டெம்பர் 2007ல் யூ-போரா கோபுரங்கள் கட்டப்பட்டுக்கொண்டு இருந்தபோது
Map
பொதுவான தகவல்கள்
வகைஅலுவலகம், வதிவிடம்
இடம்துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
நிறைவுற்றது2011
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை58
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)அயிடாஸ்
மேம்பாட்டாளர்துபாய் புரொப்பர்ட்டீஸ்

யூ-போரா கோபுரங்கள் (U-bora Towers) என்பது, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரத்தில் உள்ள "வணிகக் குடா" (Business Bay) என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டிடம் ஆகும். இக்கட்டிடம் இரண்டு கோபுரங்களை உள்ளடக்கியது. ஒன்று அலுவலகக் கோபுரம், மற்றது வதிவிடக் கோபுரம். இக்கட்டிடம் 2011 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இக்கட்டிடம் அதன் அதிக பட்ச உயரத்தை எட்டியபோது, துபாயின் 28 ஆவது உயரமான கட்டிடம் ஆனது.

வடிவமைப்பு

[தொகு]

யூ-போரா கோபுரம் 1 எனவும் அழைக்கப்படுகின்ற அலுவலகக் கோபுரமே உயரத்தில் கூடியது. 256 மீட்டர் (840 அடி) உயரம் கொண்ட இக்கோபுரம் 58 தளங்களைக் கொண்டது. சிறிய கோபுரமான வதிவிடக் கோபுரம் 20 தளங்களைக் கொண்டது. இரண்டு கோபுரங்களையும் தாங்குவது போன்றும் அவற்றை இணைப்பது போலவும் இருக்கும் நான்கு தளங்களைக் கொண்ட கட்டிடப் பகுதி வண்டிகள் தரிப்பிடமாகப் பயன்படுகிறது.

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூ-போரா_கோபுரங்கள்&oldid=1671316" இலிருந்து மீள்விக்கப்பட்டது