யூலியன் பார்னசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூலியன் பாட்றிக் பார்னசு
பிறப்பு19 சனவரி 1946 (1946-01-19) (அகவை 78)
லீசெஸ்டர், ஐக்கிய இராச்சியம்
புனைபெயர்டான் கவனாக் (துப்பறியும் புதினங்கள்), எட்வர்ட் பைஜ்
தொழில்எழுத்தாளர்
தேசியம்ஐக்கிய இராச்சியம்
வகைஉரைநடை
இணையதளம்
http://www.julianbarnes.com

யூலியன் பாட்றிக் பார்னசு (ஜூலியன் பார்ன்ஸ், Julian Patrick Barnes, பிறப்பு: 19 சனவரி 1946, இங்கிலாந்தின் லீசெஸ்டர்) ஓர் சமகால ஆங்கில எழுத்தாளரும் த சென்ஸ் ஆஃப் அன் என்டிங் என்ற நூலிற்காக 2011ஆம் ஆண்டின் மான் புக்கர் பரிசு பெற்றவரும் ஆவார். முந்தைய ஆண்டுகளில் இவரது மூன்று நூல்கள், பிளாபெர்ட்டின் கிளி (Flaubert's Parrot) (1984), இங்கிலாந்து, இங்கிலாந்து (1998), மற்றும் ஆர்தர் & ஜியார்ஜ் (2005) இந்தப் பரிசிற்காக பரிந்துரைக்கப்பட்டு இறுதிப்பட்டியலில் இடம் பிடித்திருந்தன.

பார்னசு குற்றப் புதினங்களை டான் கவனாக் என்ற புனைபெயரில் எழுதி வந்தார். இவரது படைப்புக்கள் பிரான்சில் மிகவும் வரவேற்பைப் பெற்றிருந்தன. அங்கு பிளாபெர்ட்டின் கிளி க்கு ப்ரீ மெடிசி பரிசும் டாக்கிங் இட் ஓவர் நூலிற்கு ப்ரீ ஃபெமினா பரிசும் பெற்றார். அங்கு இவர் ல ஓர்டர் தெ ஆர்ட்ஸ் யெ தெ லெட்டர்ஸ் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Interviewed by Shusha Guppy. "The Art of Fiction No. 165, Julian Barnes". Paris Review. பார்க்கப்பட்ட நாள் 10 August 2011.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூலியன்_பார்னசு&oldid=3459608" இலிருந்து மீள்விக்கப்பட்டது