யுனைடட் 93 (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனைடட் 93
United 93
இயக்கம்பால் கிரீன்ராஸ்
தயாரிப்புபால் கிரீன்ராஸ்
டிம் பெவன்
எரிக் ஃபெல்னர்
லாய்ட் லெவின்
மூலக்கதை9/11 ஆணைய அறிக்கை
படைத்தவர் 9/11 ஆணையம்
திரைக்கதைபால் கிரீன்ராஸ்
இசைஜான் பவல்
நடிப்புகிரிஸ்டியன் கிளெமென்சன்
செயேனே ஜாக்சன்
டேவிட் ஆலன் பேஷெ
பீட்டர் ஹெர்மான்
டேனியல் சவுலி
திரிஷ் கேட்ஸ்
கோரே ஜான்சன்
ரிச்சர்ட் பீக்கின்ஸ்
மைக்கேல் ஜே. ரேனோல்ட்ஸ்
காலித் அப்தல்லா
ஒளிப்பதிவுபாரி ஆக்ராய்ட்
படத்தொகுப்புகிளேர் டக்ளஸ்
ரிச்சர்ட் பியர்சன்
கிறிஸ்டோபர் ரைஸ்
கலையகம்ஸ்டுடியோகேனல்
ஓர்க்கிங் டைட்டில் பிளிம்ஸ்
சிட்னி கிம்மில் எண்டர்டெயின்மெண்ட்
விநியோகம்யூனிவர்சல் ஸ்டுடியோஸ்
(அமெரிக்கா)
யுனைடட் இண்டர்னேசனல் பிக்சர்ஸ் (பிறநாடுகள்)
வெளியீடுஏப்ரல் 28, 2006 (2006-04-28)
ஓட்டம்110 நிமிடங்கள்[1]
நாடுஅமெரிக்கா
ஐக்கிய இராச்சியம்
பிரான்சு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$15 மில்லியன்[2]
மொத்த வருவாய்$76.3 மில்லியன்[2]

யுனைடட் 93 (United 93) என்பது 2006 ஆண்டைய வாழ்கை வரலாற்று நாடக பரபரப்புத் திரைப்படமாகும். இப்படத்தை உடன் தயாரித்து எழுதி, இயக்கியவர் பால் கிரீன்ராஸ் ஆவார். இப்படத்தின் கதையானது செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் அன்று அமெரிக்காவில் விமானங்களைக் கொண்டு தாக்குதல்கள் நடத்த கடத்தப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் 93இல் நிகழும் நிகழ்ச்சிகளை அடிப்படையாக கொண்டது.[3] இத்திரைப்படம் முடிந்த அளவுக்கு உண்மை நிகழ்வுகளைக் கொண்டு படமாக்க முயற்சித்துள்ளது (சில கற்பனை நிகழ்வுகள் பயன்படுத்தப்படதாக ஒரு மறுப்பு உள்ளது). படத்தயாரிப்பாளர்களின் கூற்றின்படி, படத்திற்கு விமானப் பயணிகளின் அனைத்து குடும்பங்களும் ஒத்துழைத்ததாக கூறப்பட்டது.[4]

யுனைடெட் 93 திரைப்படத்தின் சிறப்புக் காட்சியானது 2016 ஏப்ரல் 26 அன்று நியூயார்க் நகரத்தில் நடந்த ட்ரிபேகா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. விமானத்தில் பயணித்த பலரின் குடும்ப உறுப்பினர்கள் படத்துக்கு தங்கள் ஆதரவை வழங்குவதற்காக படத்தின் சிறப்புக் காட்சியில் கலந்து கொண்டனர்.

2006 ஏப்ரலில் வட அமெரிக்காவில் வெளியிடப்பட்ட இந்தப் படம் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. படத்தின் முதல் மூன்று வார இறுதி நாட்களில் வந்த மொத்த வருமானத்தில் 10 விழுக்காடு வருவாயை யுனைட்டட் 93 விமானத்தில் பலியானவர்களுக்கான ஒரு நினைவகத்தை உருவாக்க நன்கொடையாக வழங்கப்பட்டது.[5] இப்படமானது ஐக்கிய மாகாணத்தில் $ 93.4 மில்லியனும், உலகளவில் $ 76.3 மில்லியன் வசூலையும் ஈட்டியது.[2][6] இந்த திரைப்படம் சிறந்த இயக்குனருக்கான விருது உள்ளிட்ட இரண்டு அகாடெமி விருதுளுக்கான பரிந்துரைகளைப் பெற்றது.

கதை[தொகு]

சியாத் ஜர்ரா, சயீத் அல்-கம்தி, அஹமத் அல்-நமி, அஹ்மத் அல்_ஹஸ்வாவி ஆகிய நான்கு பயங்கரவாதிகள் தாங்கள் தங்கி இருந்த விடுதியில் பிராத்தைனையில் ஈடுபடுவதாக படம் துவங்குகிறது. அதன்பிறகு நியூயார்க் விபர்டி பன்னாட்டு வானூர்தி நிலையம் வந்துசேரும் இவர்கள், பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு பிற பயணிகளோடு பயணிகளாக நியூ ஜெர்சியில் இருந்து சான்பிரான்ஸ்கோ செல்லும் வானூர்தியில் ஏறி அமர்கின்றனர். சில நெரிசல் பிரச்சனைகளால் வானூர்தி புறப்பட 40 நிமிடங்கள் தாமதம் ஏற்படுகிறது.

சற்று நேரத்தில் வானூர்தி கட்டுப்பாட்டு அறைக்கு பாஸ்டன் நகரில் இருந்து புறப்பட்ட வானூர்தியான அமெரிக்கன் 11 கடத்தப்பட்டதாக தகவல் வந்து சேர்கிறது. அதற்கு பிறகு காலை 8.45 மணிக்கு அந்த வானூர்தி உலக வர்தக மைய இரட்டை கோபுரத்தின் வடக்குப் பகுதியில் மோதுகிறது. இது நடந்த 18ஆவது நிமிடத்தில் அந்தக் கட்டடத்தின் தெற்குப் பகுதியில் யுனைட்டட் 175 வானூர்தி வந்து தாக்குகிறது. இதையடுத்து 9.45க்கு அமெரிக்கத் தலைமையகமான பெண்டகன் மீது அமெரிக்கன் 77 வானூர்தி தாக்குகிறது.

இதற்கிடையில் பறந்து கொண்டிருக்கும் யுனைட்டட் 93 வானூர்தியில் உள்ள பயங்கரவாதிகளில் ஒருவன் கழிப்பறைக்கு சென்று, ஒரு போலி வெடிகுண்டை தயாரித்து தன் இடுப்பில் அணிந்துகொண்டு தன் இருக்கையில் வந்து அமர்கிறான். பின்னர் அவனுடன் இன்னொருவனுமாக இருவர் எழுந்து பயணிகளைத் தாக்கத் துவங்குகின்றனர். அப்படியே தன் இடுப்பில் கட்டியிருக்கும் போலி வெடிகுண்டை காட்டி பயணிகளை மிரட்டுகிறான். இதே சமயம் மற்ற இரு பயங்கரவாதிகள் வானூர்தி ஓட்டுநர் அறையைக்குள் நுழைந்து, ஓட்டுநர்கள் இருவரையும் கொன்று வானூர்தியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர. விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு எந்த வித தகவலும் யுனைட்டட் 93 வானூர்தியில் இருந்து கிடைக்காமல் போகவே இதுவும் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

இச்சமயத்தில் இரட்டை கோபுரமும், பெண்டகனும் அடுத்தடுத்து வானூர்திகளால் மோதப்பட்ட செய்தி வானூர்தியில் உள்ள பயணிகளுக்கு செல்பேசிகள் வழியாக தெரியவருகிறது. இதையடுத்து தாங்கள் பயணிக்கும் வானூர்தியும் இவ்வாறு மோதுவதற்காகவே கடத்தப்பட்டிருப்பதும், இனி வானூர்தி தரையிரங்காது என்பதையும் பயணிகள் உணர்கின்றனர். இதனால் கோபம் கொள்ளும் பயணிகள் பயங்கவாதிகளின் திட்டத்தை முறியடிப்பதற்காக திட்டமிட்டு ஒரு பயங்கரவாதியைக் கொல்கின்றனர். அவன் இடுப்பில் உள்ளது போலி வெடுகுண்டு என்று கண்டறிகின்றனர். இதையடுத்து இன்னொரு பயங்கரவாதியையும் பயணிகள் தாக்குகின்றனர். இரு பயங்கவாதிகளை ஒழித்த பிறகு பயணிகள் விமானி அறையை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைகின்றனர். அங்கே வானூர்தியை இலக்கு நோக்கி விரைவாக செலுத்திக் கொண்டிருக்கும் இரு பயங்கரவாதிகளையும் கொல்கின்றனர். இதனால் கட்டுப்பாட்டை இழந்த வானூர்தி பென்சில்வேனியா நகரில் தரையில் விழுந்து நேர்ச்சிக்கு உள்ளாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "UNITED 93 (15)". United International Pictures. British Board of Film Classification. May 11, 2006. பார்க்கப்பட்ட நாள் September 29, 2013.
  2. 2.0 2.1 2.2 "United 93 (2006)". Box Office Mojo. IMDb. July 6, 2006. பார்க்கப்பட்ட நாள் June 10, 2013.
  3. Barra, Allen. "Historical Film: It's Time to See a Movie We Couldn't Bear to Go To"[தொடர்பிழந்த இணைப்பு]. American Heritage, November/December 2006.
  4. Heath, Iver (January 1, 2006). "Four Years On, a Cabin's-Eye View of 9/11". New York Times.
  5. (April 10, 20??). "A Dark Day Revisited". Newsweek.
  6. Boorstin, Julia (January 8, 2006). "MSNBC". MSN.com. பார்க்கப்பட்ட நாள் June 10, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுனைடட்_93_(திரைப்படம்)&oldid=3042337" இலிருந்து மீள்விக்கப்பட்டது