உள்ளடக்கத்துக்குச் செல்

அகாதமி விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அகாடெமி விருது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அகாதமி விருது
தற்போதைய: 95ஆவது அகாதமி விருதுகள்
அகாடமி விருது உருவப்படம் ("ஆஸ்கார்")
விருது வழங்குவதற்கான காரணம்அமெரிக்க மற்றும் சர்வதேசத் திரைப்படத் துறையில் சிறந்து விளங்குகிறது
நாடுஐக்கிய அமெரிக்கா
வழங்குபவர்அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்
முதலில் வழங்கப்பட்டதுமே 16, 1929; 95 ஆண்டுகள் முன்னர் (1929-05-16)
இணையதளம்www.oscars.org/oscars

அகாதமி விருது, (ஆங்கில மொழி: Academy Awards) ஆஸ்கார் விருது அல்லது ஓஸ்கார் விருது எனப் பரவலாக அறியப்படும் அகாதமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும். மேலும் உலகிலேயே அதிகளவில் தொலைக்காட்சி மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விழாவாகும்.

வரலாறு

[தொகு]

முதன்முதலாக அகாதமி விருதுகள் மே 16, 1929 ஆம் ஆண்டு ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 270 மக்கள் முன்னிலையில் நடந்தது. பின்னர் மேபைர் ஹோட்டலில் பெரிதாக நடந்தது.[1] மொத்தம் பதினைந்து விருதுகள் வழங்கப்பட்டன.

வெற்றியாளர்கள் நிகழ்ச்சிக்கு மூன்று மாதங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டனர். 1930ஆம் வருடம் வெற்றியாளர்கள் நிகழ்ச்சியின் இரவு 11 மணிக்கு பத்திரிகையில் வெளியிடப்பட்டன.

2010 ஆம் வருடம் வரைக்கும் மொத்தம் 2789 விருதுகள் வழங்கப்பட்டன.[2]

அகாதமி விருதுகள்

[தொகு]

சிறப்பு அகாதமி விருதுகள்

[தொகு]

இவ்விருதுகள் அகாடெமியின் சிறப்பு குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவ்விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுவதில்லை. இவ்விருதிற்கு தேந்தேடுக்கப்படுபவர் இவ்விருதை வாங்க மறுக்கலாம்.

  • சிறப்பு அகாதமி விருது: 1929 - தற்போது
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாதமி விருது: 1931 - தற்போது
  • கோர்டன் இ. சாயர் விருது: 1981 - தற்போது
  • ஜீன் ஹேர்ஷோல்ட் ஹுமானிட்டேரியன் விருது: 1956 - தற்போது
  • இர்விங் ஜி. தல்பெர்க் நினைவு விருது: 1938 - தற்போது

அடிக்குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "History of the அகாதமி விருதுகள்". Academy of Motion Picture Arts and Sciences.
  2. "A Brief History of the Oscar". Academy of Motion Picture Arts and Sciences. Archived from the original on 2008-07-30. பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 4, 2008. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அகாதமி_விருது&oldid=3926953" இலிருந்து மீள்விக்கப்பட்டது