யுசி உலாவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யுசி உலாவி
மென்பொருள் வடிவம்யுசி உலாவி Inc.
மேம்பாட்டாளர்அலிபாபா குழுமம்
நிலையான வெளியீடுUC Browser 6.0.1308.1011 for Windows, UC Browser 11.2.0.915 for Android, UC Browser Mini 10.7.9 for Android, UC Browser 9.5 for Java
இயக்க அமைப்புஐஓஎஸ், ஆண்ட்ராய்டு இயங்குதளம்,விண்டோஸ்,ஜாவா
பொறிU3 engine (based on Webkit)
அளவுUC Browser 50+ MB on Windows, UC Browser 19 MB on Android, UC Browser Mini 1.7 MB on Android
கிடைக்கக்கூடிய மொழிகள்தமிழ்,ஆங்கிலம்,இந்தி,மற்றும் பல...
வளர்ச்சி நிலைசெயலில்
வகைஇணையம்
உரிமம்இலவச பயன்பாடு
இணையத்தளம்ucweb.com
யு சி வெப் இணைய உலவி நிறுவன சின்னம்

யூ சி உலாவி என்பது ஒரு தொலைபேசிக்கான மற்றும் கணினிக்கான உலாவி ஆகும். சீனாவைச் சேர்ந்த அலிபாபா குழுமத்தினரால் இது நிர்வகிக்கப்படுகிறது. தற்போது ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ், விண்டோஸ், சிம்பியன், பிளாக்பெர்ரி போன்ற இயங்கு தளங்களில் இது செயல்படுகின்றது.[1][2][3][4][5]

வசதிகள்[தொகு]

உள் நினைவக திறன்[தொகு]

இந்த உலாவிக்கான ஒரு கணக்கினை துவங்குவதன் மூலம் இதன் உள் நினைவகத்கினை நாம் பயன்படுத்தலாம்.[6]

தரவுச் சுருக்கம்: (DATA COMPRESSION)[தொகு]

பெரும்பாலான அனைத்து உலாவிகளை விடவும் தரவுகளை சுருக்கம் செய்வதில் இவை சிறந்து விளங்குகிறது.

வேகமான உலாவுதல்[தொகு]

மொத்தமுள்ள 500 மில்லியன் பயனர்களில் 300 மில்லியன் ஆண்ட்ராய்டு பயனாளர்கள் இதனை பயன்படுத்துகின்றனர்.[7]

பதிவுகள் தறவிறக்கம்[தொகு]

நமக்கு விருப்பமான கோப்புகளில் நமக்கு தேவையானவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரே நேரத்தில் நாம் பல்வேறு தரவுகளை நம்மால் பதிவிறக்கம் செய்ய இயலும். ஒரு கோப்பினை இடைநிறுத்தம்(PAUSE)செய்து பிறகு தொடர (RESUME) முடியும்.

பயன்படும் தளங்கள்[தொகு]

ஆண்ட்ராய்டு[தொகு]

இப்போதைய நிலையில் சுமார் 500 மில்லியன் பயனாளர்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்துகின்றனர் அதில் 300 மில்லியன் மக்கள் யூ சி உலாவியினை பயன்படுத்துகிறனர்.[8] இதில் 2 வகைகள் உள்ளன அவை,

  1. யூசி உலாவி ஆண்ட்ராய்டு
  2. யூசி உலாவி மினி

ஐ.ஓ.எஸ்[தொகு]

ஐ.ஓ.எஸ் இயங்குதளத்திற்கான பதிப்பினை 2010 – ஆம் வருடம் வெளியிட்டது.</ref> and UC Browser+ HD for iPad.[9] இதில் 2 வகைகள் உள்ளன அவை, 1. யூ சி உலாவி ஐ.ஓ.எஸ் 2. யூ சி உலாவி ஹெச்.டி(HD) (IPAD)

விண்டோஸ்[தொகு]

2012ல் இதற்கான பதிப்பு வெளியிடப்பட்டது.[10]

தற்போதைய பதிப்பின் வசதிகள்:[தொகு]

தற்போதைய பதிப்பு 11.3.0 (ஆண்ட்ராய்டு)

வரலாறு & அடைப்புக்குறி[தொகு]

நாம் உலாவியில் பார்த்த பக்கங்களின் வரலாற்றையும், நாம் சேமித்து வைத்த பக்கங்களையும் இதில் காண இயலும்.

இசை:[தொகு]

நமக்குத் தேவையான பாடல்களை இதில் இருந்து பெற இயலும். மேலும் நம்முடைய உலாபேசியில் உள்ள பாடல்களையும் நம்மால் இங்கு கேட்க இயலும்.

பதிவிறக்கம்:[தொகு]

ஒரே சமயத்தில் பல்வேறு கோப்புகளை தரவிறக்கம் செய்ய இயலும்.இதனை தற்சமயம் நிறுத்தி பின் மீன்டும் பயன்படுத்தலாம்.[11]. மேம்படுத்தப்பட்ட பதிப்புகளில் சில குறைகள் சரி செய்யப்பட்டுள்ளன.[12]

வாசித்தல்[தொகு]

இரவு நேரங்களில் வாசிப்பதற்கு ஏதுவாக இரவு முறை(NIGHT MODE) உள்ளது. இதனால் கண்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பின் அளவு குறைகின்றது.

மறைநிலை உலாவி: (Incognito Browsing)[தொகு]

தற்போதைய சூழ்நிலையில் தனியுரிமை பாதுகாப்பு என்பது முக்கியமான ஒன்று, எனவே நாம் பார்க்ககூடிய பக்கங்களை வேறு யாரும் பார்க்கக் கூடாது எனும் வேளையில் இதனை நாம் பயன்படுத்தலாம். 6.பகிர்தல்: நாம் பார்க்கக்கூடிய பக்கங்களையோ அல்லது தரவுகளையோ அதனை உலாவியில் இருந்தவாறே நம்மால் எளிதில் பகிர இயலும். 7.புத்திசாலி மின்விசை சேர்வி: (Smart Charging) சற்று அதிக வேகத்தில மின்விசை சேர்க்க இயலும். 8.செய்திகள்: அறிவிப்பின் மூலமாக செய்தியினை நம்மால் அரிய இயலும். மேலும் பல மொழிகளில் நம்மால் செய்திகளை படிக்க இயலும். 9.விளம்பரத் தடுப்பான்: (Ad block)

இதனையும் காண்க[தொகு]

கூகிள் குரோம்

சான்றுகள்[தொகு]

  1. "iTunes Store". apple.com.
  2. "UC BrowserHD – Windows Apps on Microsoft Store". windowsphone.com. பார்த்த நாள் 7 November 2016.
  3. UCWeb:. "UC Browser (Symbian S60V5)". CNET. CBS Interactive.
  4. "UC Browser English - BlackBerry World". blackberry.com.
  5. "UC Browser Enters App Store". uc.cn.
  6. "UC Web launches updated version of UC Browser for Android, Java and iPad | NDTV Gadgets". Gadgets.ndtv.com (2013-04-24). பார்த்த நாள் 2014-03-10.
  7. Jon Russell (21 March 2014). "Chinese Browser-Maker UCWeb Cross 500 Million Users". The Next Web.
  8. "UCBrowser surpasses Opera Mini with 33 percent more downloads – CELLPHONEBEAT". Cellphonebeat.com. பார்த்த நாள் 2014-03-10.
  9. "UC Browser+ for iPad on the App Store on iTunes". itunes.apple.com (2014-02-07). பார்த்த நாள் 2014-03-10.
  10. "Best Free Download UC Browser for pc - UC Browser for Web".
  11. Yin, Sara. "UC Browser 8.0.5 (for Android) Review & Rating". PCMag.com. பார்த்த நாள் 2014-03-10.
  12. "UC Browser Releases Version 9.3 For Android Platform". Efytimes.com (2013-09-24). பார்த்த நாள் 2014-03-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுசி_உலாவி&oldid=2724285" இருந்து மீள்விக்கப்பட்டது