உள்ளடக்கத்துக்குச் செல்

விண்டோஸ் போன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விண்டோஸ் திறன்பேசி இயங்குதளம்
நிறுவனம்/
விருத்தியாளர்
மைக்ரோசாஃப்ட்
Programmed in சி, சி++[1]
இயங்குதளக் குடும்பம் விண்டோசு
முதல் வெளியீடு
  • NA November 8, 2010
  • PAL October 21, 2010
  • EU October 21, 2010
கிடைக்கும் மொழிகள் 25+ மொழிகள்[2]
அனுமதி வணிக நோக்கமுடைய மென்பொருள்
இணையத்தளம் www.windowsphone.com

விண்டோஸ் போன் (Windows Phone) என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படும் விண்டோஸ் இயங்குதளத்தின் கைபேசி பதிப்பு ஆகும். இதன் முதல் பதிப்பு 7.5 மாங்கோ அக்டோபர் 21, 2010ல் வெளியிடப்பட்டது. தற்போதைய இரண்டாவது பதிப்பு விண்டோஸ் போன் 8 அக்டோபர் 29, 2012ல் வெளியிடப்பட்டது. அதி வேகமான இன்டெர்னெட் எக்ஸ்ப்லோரர் 10 இதனுடன் வழங்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் போலல்லாமல் சொந்தமான கெர்னல் கொண்டு இயங்குகிறது. புகழ்பெற்ற MS அலுவலகத் தொகுப்பு கொடுக்கப்பட்டு இருப்பினும், இதனால் ஆண்டிராய்டு வகை கைபேசி களுடன் போட்டியிட முடியவில்லை. ஆண்டிராய்டு இயங்குதளத்தை அதிகம் உபயோகிக்கும் சாம்சங், சென்ற வருடம் கொண்டுவந்த விண்டோஸ் இயங்குதளத்துடன் கூடிய நான்காம் தலைமுறை தொழில்நுட்பக் கைபேசி படு வீழ்ச்சியை சந்தித்தது. ஆண்டிராய்டு கைபேசிகள் அதிகம் விற்றாலும், இதில் தங்களின் எதிர்காலம் இல்லாததை உணர்ந்த சாம்சங் தன்னுடைய படா இயங்குதளத்தில் கவனம் செலுத்தி வருகிறது. நோக்கியாவின் லூமியா ("Lumia") வகை கைபேசிகள் இந்த விண்டோஸ் இயங்குதளத்துடனேயே வெளிவருகின்றன ("Lumia 510, Lumia 520, Lumia 610, Lumia 620, Lumia 710, Lumia 720, Lumia 800, Lumia 810, 820, Lumia 900, Lumia 920") ஹச்.டி.சி (HTC) போன்ற நிறுவனங்களும், சோதனை முயற்சியாக இந்த விண்டோஸ் இயங்குதளத்துடன் கூடிய கைபேசிகளை வெளியிட்டு உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lextrait, Vincent (2010). "The Programming Languages Beacon, v10.0". Archived from the original on மே 30, 2012. பார்க்கப்பட்ட நாள் February 12, 2010. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  2. Petersen, Palle (June 20, 2012). "Windows Phone 8 announced today: will support 50 languages". Microsoft Language Portal Blog. Microsoft. Archived from the original on டிசம்பர் 26, 2018. பார்க்கப்பட்ட நாள் July 21, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்டோஸ்_போன்&oldid=3793077" இலிருந்து மீள்விக்கப்பட்டது