யாழ்வாணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யாழ்வாணன்
Yazhvanan.jpg
பிறப்புநா. சண்முகநாதன்
சூன் 13, 1933(1933-06-13)
அனுராதபுரம், இலங்கை
இறப்புஅக்டோபர் 5, 1996(1996-10-05) (அகவை 63)
சென்னை, இந்தியா
பணிநகர மண்டபக் காப்பாளர்
அறியப்படுவதுஎழுத்தாளர்
பெற்றோர்முருகேசு நாகலிங்கம், செல்லையா லட்சுமி ராஜாமணி
வாழ்க்கைத்
துணை
தபோநிதி
பிள்ளைகள்யாழ் சுதாகர், சுரதா யாழ்வாணன், சுரேஷ், கண்ணதாசன், யாழினி

யாழ்வாணன் என அழைக்கப்படும் நாகலிங்கம் சண்முகநாதன் (சூன் 13, 1933 – அக்டோபர் 5, 1996) ஈழத்தின் சிறுகதையாசிரியர்.[1][2][3]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

முருகேசு நாகலிங்கம், செல்லையா லட்சுமி ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக அனுராதபுரத்தில் பிறந்தவர் யாழ்வாணன். மனைவி பெயர் தபோநிதி. பிள்ளைகள் யாழ் சுதாகர், சுரதா யாழ்வாணன், சுரேஷ், கண்ணதாசன், யாழினி ஆகியோர்.

இலக்கிய வாழ்க்கை[தொகு]

யாழ் இலக்கிய வட்டத்தை உருவாக்கியவர்களுள் யாழ்வாணனும் ஒருவர். தொடக்க காலத்திலிருந்தே அதன் செயலாளராகப் பணிபுரிந்து வந்தார். யாழ்வாணன் அவர்கள் சுகாதாரப் பகுதியினரால் வெளியிடப்பட்ட சுகாதார ஒலி என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1968ஆம் ஆண்டு நடைபெற்ற சுகாதார - குடி நல வார விழாக் குழுவின் செயலாளராகப் பணியாற்றி, எழில்மிகு யாழ்ப்பாணம் என்ற இதழையும் வெளியிட்டார். அண்ணா அஞ்சலி என்ற தொகுப்பு நூலை வெளியிட்டார். இவரது சிறுகதைத் தொகுப்பு அமரத்துவம் என்ற பெயரில் வெளியானது.[3] இவரது சங்கமம், மொட்டை, முள், செல்வம் நீ தியாகி போன்ற பல சிறுகதைகள்,<ref name=TA>மொழிபெயர்ப்புக் கதைகள் மல்லிகை உட்படப் பல ஈழத்துப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

கடனுதவிச் சிக்கனச் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். சிறந்த சிறுகதையாசிரியராக யாழ்வாணன் பல பரிசுகளைப் பெற்றவர்..[3]

வெளிவந்த நூல்கள்[தொகு]

  • அண்ணா அஞ்சலி (தொகுப்பு)
  • அமரத்துவம் (சிறுகதைகள்)
  • மலர்ந்த வாழ்வு (சிறுகதைகள், 2005)

மறைவு[தொகு]

1987ஆம் ஆண்டு அவர் தனது பணியில் இருந்து ஓய்வு பெற்று சென்னைக்கு இடம் பெயர்ந்தார். 1996 அக்டோபர் 5 இல் மாரடைப்பால் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Welcome To TamilAuthors.com". பார்த்த நாள் 18 சூன் 2016.
  2. "ஈழத்து எழுத்தாளர் யாழ்வாணன்". மாலைமலர் (16 சூன் 2016). பார்த்த நாள் 18 சூன் 2016.
  3. 3.0 3.1 3.2 "யாழ்வாணன்". மூல முகவரியிலிருந்து 21 அக்டோபர் 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 18 சூன் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாழ்வாணன்&oldid=2716321" இருந்து மீள்விக்கப்பட்டது