சுரதா யாழ்வாணன்
Appearance
சுரதா யாழ்வாணன்(Suratha Yazhvanan ) தமிழ் கணித்துறைக்கு பங்களித்துவரும் முன்னோடிகளில் ஒருவராவார். தமிழில் தட்டச்ச விரும்புவோர் வசதிக்காக பல்வேறு வகையான நிரல்களை எழுதி உள்ளார். இவரின் தினமணி, தினத்தந்தி, விகடன், TSC, TAB, மயிலை, பாமினி, அமுதம், தினகரன் போன்ற பல்வேறு வகையான எழுத்துருக்களை ஒருங்குறிக்கு ( UNICODE ) மாற்றும் பொங்குதமிழ் செயலி ஒருங்குறியில் வலைப்பதிபவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகும். தமிழ் தட்டச்சு தெரியாத ஆங்கில ஒலியியல் ( Romanized) முறையில் தமிழ் எழுத விரும்புவோர் இவரது செயலிகளைப் பயன்படுத்துகின்றனர். இவர் தற்போது ஜெர்மனியில் வசித்து வருகிறார்.
சுரதா ஈழத்து எழுத்தாளரான காலஞ்சென்ற யாழ்வாணனின் மகனும் ஒலிபரப்பாளர் யாழ் சுதாகரின் சகோதரரும் ஆவார்.