யாழ்ப்பாணம் நாகர்கோவில் பாடசாலை சிறார்களின் படுகொலை, 1995

ஆள்கூறுகள்: 9°42′02″N 80°18′31″E / 9.70056°N 80.30861°E / 9.70056; 80.30861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகர்கோவில் பாடசாலை குண்டுவீச்சு
யாழ்ப்பாணம் நாகர்கோவில் பாடசாலை சிறார்களின் படுகொலை, 1995 is located in இலங்கை
யாழ்ப்பாணம் நாகர்கோவில் பாடசாலை சிறார்களின் படுகொலை, 1995
இடம்நாகர்கோவில், இலங்கை
ஆள்கூறுகள்9°42′02″N 80°18′31″E / 9.70056°N 80.30861°E / 9.70056; 80.30861
நாள்செப்டம்பர் 22, 1995 (+6 GMT)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
இலங்கைத் தமிழர்
தாக்குதல்
வகை
விமானக் குண்டுவீச்சு
ஆயுதம்குண்டு
இறப்பு(கள்)39
காயமடைந்தோர்பலர்
தாக்கியோர்இலங்கை வான்படை

நாகர்கோவில் பாடசாலை சிறார்களின் படுகொலை என்பது 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோவில் மத்திய பாடசாலையில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்த நிகழ்வைக் குறிக்கும். இலங்கை அரசு இக்குற்றச்சாட்டை மறுத்தது.[1] தாக்குதல் நடைபெற்ற காலத்தில் இலங்கையில் ஊடகத் தணிக்கை நடைமுறையில் இருந்ததாக ஊடகவியலாளர்களும், மனித உரிமைகள் அமைப்புகளும் தெரிவித்தன.[2]

அன்று பகல் 12:30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணிக்கு இலங்கை விமானப் படைகளின் "புக்காரா" விமானங்கள் குண்டுகளை கண்மூடித்தனமாக வீசின. எதுவும் அறியாத மாணவர்கள் மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டனர். இந்தத் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 25 சிறார்கள் உடல்சிதறி கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது மொத்தம் 39 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் 200 பேர் வரையில் படுகாயமடைந்தனர். இதில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது சிறுவன் வரை அடங்குகின்றனர்..[3]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Navy assault on fishermen". Sri Lanka monitor. Archived from the original on 2003-06-12. பார்க்கப்பட்ட நாள் 2006-01-08.
  2. "Human Rights Development - Sri Lanka". HRW. பார்க்கப்பட்ட நாள் 2006-01-11.
  3. "1995 UTHR report". UTHR. பார்க்கப்பட்ட நாள் 2006-01-11.

உசாத்துணை[தொகு]