யாமாகுச்சி எசுத்தராக்கல் வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

யாமாகுச்சி எசுத்தராக்கல் வினை (Yamaguchi esterification) என்பது அலிஃபாட்டிக் கார்பாக்சிலிக் அமிலம் மற்றும் 2,4,6-முக்குளோரோபென்சோயில் குளோரைடு (யாமாகுச்சி வினையூட்டி) ஆகிய இரண்டு கரிமசேர்மங்களும் வினைபுரிந்து கலப்பு அமில நீரிலிகளை உருவாக்கும் ஒரு வேதி வினையாகும். பின்னர் இந்த கலப்பு நீரிலி விகிதவியல் அளவு இருமெத்திலமினோபிரிடின் முன்னிலையில் ஆல்ககாலுடன் சேர்ந்து விரும்பத்தக்க எசுத்தரை அளிக்கிறது. இவ்வேதிவினையை முதன்முதலில் 1979 ஆம் ஆண்டில் மசாரு யாமாகுச்சி அறிமுகப்படுத்தினார்[1][2].

Yamaguchi esterification

குறிப்பாக இந்த வேதிவினை மேக்ரோ - லாக்டோன் வகை உயர் செயல்திறன் வளைய எசுத்தர்கள் தயாரிக்கும் தொகுப்பு வினைகளில் பயனுள்ளதாக இருக்கிறது.

வினை வழிமுறை[தொகு]

அலிஃபாட்டிக் காபொட்சிலேட்டு யாமாகுசி கரணியின் கார்பனைல் கார்பனுடன் சேர்ந்து முதலில் கலப்பு நீரிலியாக மாறுகிறது. பின்னர் தடையுற்ற இக்கார்பன் பகுதி தலத்தேர்வு முறையில் இருமெத்திலமினோபிரிடினால் தாக்கப்படுகிறது. இதன் விளைவாக அசைல் பதிலீடு செய்யப்பட்ட இருமெத்திலமினோபிரிடின் உண்டாவதும் அதனைத் தொடர்ந்து இது ஆல்ககாலுடன் வினைபுரிந்து எசுத்தரை உருவாக்குதலும் படிப்படியாக நிகழ்கின்றன.

Yamaguchi mechanism

அலிஃபாட்டிக் அமில வினைகளின் தலத்தேர்வு முறையை விளக்குவதற்கு சமச்சீர் அலிஃபாட்டிக் நீரிலி உருவாகும் இவ்வினை முன்மொழியப்படுகிறது. இதனடிப்படையில் அலிஃபாட்டிக் காபொட்சிலேட்டுகள் அதிக ஆற்றல் அணுக்கருகவரிகள் என்றும் அலிஃபாட்டிக் நீரிலிகள் இருமெத்திலமினோபிரிடின், ஆல்க்கால் மற்றும் அதனையொத்த பிற சேர்மங்களுடன் அதிக எலக்ட்ரான் கவர் ஆற்றலும் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Inanaga, J.; Hirata, K.; Saeki, H.; Katsuki, T.; Yamaguchi, M. "A Rapid Esterification by Means of Mixed Anhydride and Its Application to Large-ring Lactonization". Bull. Chem. Soc. Jpn. 1979, 52, 1989–1993. எஆசு:10.1246/bcsj.52.1989
  2. Kawanami, Y.; Dainobu, Y.; Inanaga, J.; Katsuki, T.; Yamaguchi, M. "Synthesis of Thiol Esters by Carboxylic Trichlorobenzoic Anhydrides". Bull. Chem. Soc. Jpn. 1981, 54, 943–944. எஆசு:10.1246/bcsj.54.943

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

  • Yamaguchi esterification—organic-chemistry.org
  • Investigation of the Yamaguchi Esterification Mechanism. Synthesis of a Lux-S Enzyme Inhibitor Using an Improved Esterification Method. I. Dhimitruka, J. SantaLucia, Org. Lett., 2006, 8, 47–50. Article