உள்ளடக்கத்துக்குச் செல்

யாக்சுச்சிலான் நிலைவிட்டம் 24

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிலைவிட்டம் 24
பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சியில் உள்ள நிலைவிட்டம்
செய்பொருள்சுண்ணக்கல்
உருவாக்கம்கிபி 709 அக்டோபர் 28 [சான்று தேவை]
தற்போதைய இடம்பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன், இங்கிலாந்து

யாக்சுச்சிலான் நிலைவிட்டம் 24 என்பது தற்கால மெக்சிக்கோவின் சியாப்பாசில் உள்ள யக்சுச்சிலான் என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய மாயர்களின் சுண்ணக்கல் சிற்பத்துக்குத் தற்காலத் தொல்லியலாளர் கொடுத்த பெயர் ஆகும். ஏறத்தாழ கிபி 725 ஐச் சேர்ந்தது என்பதால், இந்த நிலைவிட்டம் மாயர் பிந்திய செந்நெறிக் காலப்பகுதிக்குள் அடங்குகிறது. இதிலுள்ள மாயர் குறியீட்டு எழுத்துக்கள் இந்தக் காட்சி கிபி 709 அக்டோபர் 24ல் இடம்பெற்ற குருதிசிந்தும் சடங்கைக் குறிப்பதைக் காட்டுகின்றன.[1]

கண்டுபிடிப்பும் அகற்றலும்

[தொகு]

நிலைவிட்டம் 24 அதன் மூலச் சூழலில் நிலைவிட்டம் 25, 26 என்பவற்றுடன் யாக்சுச்சிலியனில் உள்ள அமைப்பு 23ல் கண்டுபிடிக்கப்பட்டது. அல்பிரட் மவுட்சிலே 1882ல் கட்டிடத்தின் பக்க நுழைவாயில் பகுதியில் இருந்து வெட்டியெடுத்து பெரிய பிரித்தானியாவுக்கு அனுப்பினார். அது இன்றுவரை அங்கேயே பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது. நிலைவிட்டம் 25ம் 1883ல் அனுப்பப்பட்டது. நிலைவிட்டம் 26, 1897ல் தியோபர்ட் மேலர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1964ல் இது மெக்சிக்கோவில் உள்ள தேசிய மானிடவியல் அருங்காட்சியகத்துக்கு அனுப்பப்பட்டது. அதன் பின்னர் கட்டிடம் சிதைவடைந்து விட்டது.

மேற்கோள்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]