யாக்கோப்சன் உறுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணம் நுகரி
Frontal section of nasal cavities of a human embryo 28 mm. long (Vomeronasal organ of Jacobson labeled at right)
இலத்தீன் organum vomeronasale
கிரேயின்

subject #223 996

முன்னோடி olfactory placode
Dorlands/Elsevier o_06/12596317

யாகோப்சன் உறுப்பு (Jacobson's organ) என்பது பல வகையான விலங்குகளில் மணம் நுகர் உறுப்பின் அருகே காணப்படும் சிறப்பு துணை மணம் நுகரி உறுப்பு. இது ஆங்கிலத்தில் வோமெரோனேசல் ஆர்கன் [1] (vomeronasal organ) என்றும் சுருக்கமாக VNO என்றும், அறியப்படுகின்றது. இதனை 1813 இல் டென்மார்க் நாட்டு அறுவை மருத்துவர் லூடுவிக் யாகோப்சன் (Ludvig Jacobson) கண்டுபிடித்தார்[2].

இவ்வுறுப்பு, கரு வளர்ச்சிநிலைகளில், மூக்கின் நுகர் உறுப்பின் அருகே சிறு திட்டாகத் தோன்றி மூக்குவழியாக மூளைக்குச் செல்லும் நரம்புத் தொகுதியுடன் தொடர்பு கொள்ளுகின்றது. இது மணத்திற்குக் காரணமான மணவேதிப்பொருள்களை உணரும் உணர்விகள் கொண்ட உறுப்பு. இதனை மணமுணர்வி உறுப்பு என்றும் சொல்வர். இது மூக்கின் துளையில் இருந்து பெரும்பாலும் பிரிந்து தனியாக ஒரு குருத்தெலும்புப் பகுதியால் சூழ்ந்திருப்பது, ஆனால் மூக்கின் உள் முனையில் தொடர்புகொளுமாறு சிறு திறப்பு கொண்டது. இவ்வுறுப்பு பிறைநிலா போன்ற குழாய் வடிவானது. இது சிலி மூக்கு என்னும் குருதெலும்பின் இரு புறமும் உள்ளது. இது மணத்தை நுகரும் முதற் துணைக்கருவியாகப் பயன்படுகின்றது. அதன் பின் இதன் மணவேதிப்பொருள்களின் தூண்டுணர்வலைகள் முன் மூளைக்கு மூக்கின் நுகர்நரம்பு முடிச்சு வழியாக சென்று மூளையின் அமிக்தலா, ஐப்போதாலமசு ஆகியபகுதிகளுக்குச் செல்கின்றன.


மேற்கோள்கள்[தொகு]

  1. vomer என்றால் கலப்பைக் கொழு (ploughshare) என்று ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி சுட்டுகின்றது. nasal என்றால் மூக்கைப் பற்றியது என்று பொருள். மூக்கின் இரு துளைகளையும் பிரித்து நிற்கும் மெல்லிய தகடு போன்ற குருத்தெலும்புக்கு vomer என்று பெயர்.
  2. Jacobson, L. (1813). Anatomisk Beskrivelse over et nyt Organ i Huusdyrenes Næse. Veterinær=Selskapets Skrifter [in Danish] 2,209–246.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாக்கோப்சன்_உறுப்பு&oldid=1352855" இலிருந்து மீள்விக்கப்பட்டது