யமி
Appearance
யமுனா | |
---|---|
வகை | தேவி, புண்ணிய நதிகளில் ஒருவர் |
இடம் | யமுனை நதி |
பெற்றோர்கள் | சூரியன்(தந்தை), சஞ்ஜனா (தாய்) |
வாகனம் | ஆமை |
யமி அல்லது யமுனா(यमी) வேதத்தில் முதல் பெண்ணாக கருதப்படுகிறார். யமன் இவருடைய இரட்டை சகோதரர் ஆவார். இவர்கள் இருவரும் சூரிய தேவன் மற்றும் சூரியனின் முதலாவது மனைவி சந்தியா தேவிக்கும் பிறந்தவர்கள் ஆவார். யமியை யமுனா எனவும் அழைப்பர்.
யமுனா அதே பெயருடைய நதியின் அதிபதியாக உள்ளார். மேலும் யமிக்கு யாமினி(यामीनी) என்ற பெயரும் உண்டு இதற்கு இரவு என்று பொருள். யமி கருமை நிறத்துடன் ஆமையை வாகனமாக கொண்டவராக சித்தரிக்கப்படுகிறார்.
மேலும் பாகவத புராணத்தில் கிருஷ்ணனின் துணையாகவும் வணங்கப்படுகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- Dictionary of Hindu Lore and Legend (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-51088-1) by Anna Dhallapiccola