யமாத்தோ இனக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யமத்தோ
மொத்த மக்கள்தொகை
120,000,000+
மொழி(கள்)
நிப்பானிய மொழி
சமயங்கள்
பௌத்தம், சிந்தோயிசம், கிறிஸ்தவம்

யமாட்டோ இனக்குழு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த முதன்மையான இனக்குழுவாகும். யமாட்டோ என்னும் சொல் 19 ஆம் நூற்றாண்டளவில் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. தலைநிலத்து ஜப்பான் மக்களை பிற ஜப்பானின் விளிம்புப் பகுதிகளில் வாழ்ந்த அயினு (Ainu), ரியுக்யுவான் (Ryukyuans), நிவிக்ஸ் (Nivkhs), உயில்ட்டா (Uilta) போன்ற உள்ளூர் சிறுபான்மை இன மக்களிலிருந்தும்; கொரியர்கள், தாய்வான் மக்கள், தாய்வான் தொல்குடிகள், போன்ற பிற நாட்டு இனக்குழுக்களிடம் இருந்தும் வேறுபடுத்திக் காட்டுவதற்காக இது பயன்பட்டது. தொடக்கத்தில் இம் மக்கள் குடியேறிய இடத்தின் பெயர் இதுவாகும். ஜப்பானில் 4 ஆம் நூற்றாண்டில் நிலவிய யமாட்டோ அரசின் பெயரிலிருந்தே இச் சொல் பெறப்பட்டது. யமாட்டோ மக்கள், 6 ஆம் நூற்றாண்டளவில், அக்காலத்தில் ஆசியாவிலேயே முன்னேறியவைகாகக் கருதப்பட்ட சீனாவின் சுயி, தாங் ஆகிய அரசுகளைப் பின்பற்றி, ஒரு அரசை நிறுவினர். யமாட்டோக்களின் செல்வாக்கு விரிவடைந்து தீவு முழுவதும் பரவியபோது, பழைய ஜப்பானிய மொழிக்குப் பதிலாக யமோட்டோக்களின் மொழி பொதுப் பேச்சு மொழி ஆனது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யமாத்தோ_இனக்குழு&oldid=3151563" இலிருந்து மீள்விக்கப்பட்டது