ம. ப. வின்செண்ட்டு
ம. ப. வின்செண்ட்டு M. P. Vincent | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2011–2016 | |
முன்னையவர் | இராச்சாச்சி மேத்யூ தாமசு |
பின்னவர் | வழக்கறிஞர் கே. இராசன் |
தொகுதி | ஒல்லூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 19 சனவரி 1964 திருச்சூர், கேரளம் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம்(s) | புதுக்காடு, திருச்சூர் |
இணையத்தளம் | website |
மணியாகு பவுலோசு வின்செண்ட்டு (M. P. Vincent) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரசியல்வாதியாவார். 1997 ஆம் ஆண்டில் இளைஞர் காங்கிரசு பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்தார். 2011 ஆம் ஆண்டில் கேரள சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஒல்லூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு இந்திய பொதுவுடமைக் கட்சி வேட்பாளரிடம் தோற்றுப் போனார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]வின்செண்ட்டு 1964 ஆம் ஆண்டு சனவரி மாதம் 19 ஆம் தேதி திருச்சூர் மாவட்டம் புதுக்காட்டில் மணியாகு இல்லத்தைச் சேர்ந்த அழகப்ப நகர் பவுலோசு மற்றும் மேரி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். 1979 ஆம் ஆண்டு செங்கலூர் செயின்ட் மேரிசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், பின்னர் 1984 ஆம் ஆண்டு இரிஞ்சாலக்குடா கிறிஸ்து கல்லூரியில் சேர்ந்து படித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Seasoned politicians, debutants share space in Congress candidate list". தி இந்து. 24 மார்ச்சு 2011. Archived from the original on 15 ஏப்பிரல் 2011. பார்க்கப்பட்ட நாள் 17 செப்டெம்பர் 2011.
- ↑ "LDF hopes rice scheme will work in its favour in Ollur". தி இந்து. 2011-04-04. Archived from the original on 2012-11-10. பார்க்கப்பட்ட நாள் 2011-09-17.
- ↑ "M.P.VINCENT - INC - OLLUR". National Election Watch. பார்க்கப்பட்ட நாள் 2011-09-17.