உள்ளடக்கத்துக்குச் செல்

மோன்பா பழங்குடியின மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மோன்பா அல்லது மோம்பா என்பது (The Monpa or Momba) இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப்பிரதேசத்தில் வசித்து வரும் முதன்மையான பழங்குடியின மக்களாவர். தவாங் மோன்பாஸ் சாங்ரெலுங்கிலிருந்து இடம்பெயர்வு வரலாற்றைக் கொண்டுள்ளனர். வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஒரே நாடோடி பழங்குடியினர் மோன்பா என்று நம்பப்படுகிறது - இவர்கள் செம்மறி ஆடு, மாடு, யாக், ஆடுகள் மற்றும் குதிரைகள் போன்ற விலங்குகளை முற்றிலும் நம்பியிருந்தனர். இவர்களின் மொழிகள் திபெத்திய எழுத்துக்களுடன் எழுதப்பட்ட திபெடோ-பர்மன் மொழிகள் ஆகும்.

பெரும்பாலான மோன்பாக்கள் இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் வாழ்கின்றனர், சுமார் 60,000 மக்கள் தொகையிலானோர், தவாங் மற்றும் மேற்கு காமெங் மாவட்டங்களை மையமாகக் கொண்டு வாழ்கின்றனர். சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான திபெத்தில், கோனா கவுண்டி, பேயி மாவட்டத்தில் பாலுங் மற்றும் மடோக் கவுண்டி ஆகிய பகுதிகளில் சுமார் 25,000 மோன்பாக்கள் வாழ்கின்றனர். இந்த இடங்கள் குறைந்த உயரத்தில் உள்ளன, குறிப்பாக மடோக் கவுண்டி, இது திபெத்தின் மற்ற பகுதிகளைப் போலன்றி வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது.[1] அருணாசலப் பிரதேசத்தில் வசிக்கும் 60000 மோன்பாக்களில், 20000 மக்கள் தவாங் மாவட்டத்தில் வசிக்கின்றனர். இந்த மாவட்டத்தின் மக்கள் தொகையில் 97% இந்த இன மக்களேயாவர். இதைத்தவிர மீதமுள்ளோர் அனைவரும் மேற்கு காமெங் மாவட்டத்தில் வசிக்கின்றனர். இங்கு மொத்த மக்கள் தொகையில் 77% இவர்களேயாவர். பூட்டான் எல்லைக்கருகில் காணப்படும் கிழக்கு காமெங் மாவட்டத்தில் சிறிதளவு மக்கள் வசிக்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Moinba Ethnic Group and its customs". Tibet Travel Guide-Let's Travel Tibet. Archived from the original on 2013-10-23. பார்க்கப்பட்ட நாள் 2013-10-20.