மோண்ட் முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோண்ட் செயல் முறை மூலம் தயாரிக்கப்பட்ட நிக்கல் கோளங்கள்

மோண்ட் முறை (Mond process அல்லது carbonyl process) என்பது தூய்மையற்ற கலப்பு நிக்கல் கூட்டுப் பொருட்களிலிருந்து கார்பனோரொக்சைடை (CO) பயன்படுத்தி தூய நிக்கலைப் பிரி்க்கும் வேதியியல் செயல்முறையாகும். இம்முறையை லுட்விக் மோண்ட் என்பவர் 1890 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார்.[1]

கார்பனோரொக்சைட்டு நிக்கலுடன் இயல்பாகவே வினைப்பட்டு நிக்கல் கார்பொனைல் ஆக வளிம நிலையில் கிடைக்கிறது. நிக்கலின் இந்த இயல்பே மொண்ட் முறையில் பயன்படுத்தப்படுகிறது.

மோண்ட் முறையில் மூன்று படிமுறைகள் உள்ளன:

1. நிக்கல் ஒக்சைடு செயற்கை வளிமத்துடன் (syngas) 200 °செ வெப்பநிலையில் தாக்கமடைந்து ஒக்சிசனை வெளியேற்றி, தூய்மையற்ற நிக்கலைத் தருகிறது. இதனுடன் இரும்பு, கோபால்ட் போன்ற மாசுக்கள் கலந்துள்ளன.

NiO (s) + H2 (g) → Ni (s) + H2O (g)

2. இந்த தூய்மையற்ற நிக்கல் மேலதிக கார்பனோரொக்சைட்டுடன் 50–60 °C இல் தாக்கமடைந்து நிக்க கார்பனைல் கிடைக்கிறது. மாசுக்கள் திடப்பொருட்களாக வெளியேறுகின்றன.

Ni (s) + 4 CO (g) → Ni(CO)4 (g)

3. மேலதிக கார்பனோரொக்சைட்டு மற்றும் நிக்கல் கார்பனைல் கலவை 220–250 °செ இற்கு வெப்பமாக்கப்படும் போது, நிக்கல் டெட்ராகார்பனைல் பிரிவடைந்து நிக்கலாகப் பெறப்படுகிறது:

Ni(CO)4 (g) → Ni (s) + 4 CO (g)

மேற்கோள்கள்[தொகு]

  1. Mond, L.; Langer, C.; Quincke, F. (1890). "Action of Carbon Monoxide on Nickel". Journal of the Chemical Society, Transactions 57: 749–753. doi:10.1039/CT8905700749. https://archive.org/details/sim_journal-of-the-chemical-society-transactions_1890_57/page/749. 
  • A dictionary of science - ELBS
  • "Nickel: The Essentials". WebElements.
  • "Nickel Chemistry". University of the West Indies (Mona).
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோண்ட்_முறை&oldid=3682371" இலிருந்து மீள்விக்கப்பட்டது