மோகா இரயில் நிலையம்
மோகா Moga | |
---|---|
இந்திய இரயில்வே | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | இரயில்வே சாலை, மோகா இந்தியா |
ஆள்கூறுகள் | 30°49′03″N 75°10′07″E / 30.8175°N 75.1687°E |
ஏற்றம் | 223 மீட்டர்கள் (732 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | வடக்கு தொடருந்து மண்டலம் |
தடங்கள் | லூதியானா–பாசில்கா பாதை |
நடைமேடை | 2 |
இருப்புப் பாதைகள் | 5 ft 6 in (1,676 mm) அகலப் பாதை |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரைமட்டத்தில் நிலையானது |
தரிப்பிடம் | உண்டு |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை |
மற்ற தகவல்கள் | |
நிலை | செயல்பாட்டில் |
நிலையக் குறியீடு | MOGA |
இரயில்வே கோட்டம் | பிரோசுபூர் இரயில்வே கோட்டம் |
மின்சாரமயம் | இல்லை |
அமைவிடம் | |
மோகா இரயில் நிலையம் (Moga railway station) இந்திய மாநிலமான பஞ்சாபில் உள்ள மோகா மாவட்டத்தில் அமைந்துள்ளது. மோகா நகரத்திற்கு இந்நிலையம் சேவை செய்கிறது.[1][2]
இரயில் நிலையம்[தொகு]
மோகா இரயில் நிலையம் கடல் மட்டத்திலிருந்து 223 மீட்டர் (732 ) உயரத்தில் அமைந்துள்ளது. மேலும் இதற்கு எம்.ஓ.ஜி.ஏ என்ற குறியீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டு நடைமேடைகள் உள்ளன. நடைமேடைகள் நன்கு பாதுகாக்கப்படவில்லை. இங்கு தண்ணீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல வசதிகள் இல்லை. இந்த நிலையம் லூதியானா-பாசில்கா பாதையில் சேவை செய்கிறது.