மொலோய் கதக்
மொலோய் கதக் | |
---|---|
மேற்கு வங்காள சட்டம் & பொதுப்பணித்துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் சூலை 2014 (சட்டம்) 10 மே 2021 (பொதுப்பணித்துறை) | |
தொழிலாளர் துறை அமைச்சர், மேற்கு வங்காளம் | |
பதவியில் சூலை 2014 – 2021 | |
முன்னையவர் | புரந்தேவ் போஸ் |
வேளாண் துறை அமைச்சர் | |
பதவியில் நவம்பர், 2012 – மே, 2014 | |
மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 13 மே 2011 2001 - 2006 | |
முன்னையவர் | புதிய தொகுதி (ஆசன்சோல் வடக்கு) அமிதவ முகர்ஜி (ஹிராப்பூர்) |
பின்னவர் | தபஸ் பானர்ஜி (ஹிராப்பூர்) |
தொகுதி | ஆசன்சோல் வடக்கு சட்டமன்றத் தொகுதி ஹிராப்பூர் சட்டமன்றத் தொகுதி (2001 - 2006) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1956 உக்கிரா |
அரசியல் கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
துணைவர் | சுதேஷ்ணா கதக் |
பிள்ளைகள் | 1 |
வாழிடம் | ஆசன்சோல் |
முன்னாள் கல்லூரி | இராமகிருஷ்ண மிஷின் உயர்நிலைப்பள்ளி, ஆசன்சோல் மற்றும் ஜோகேஸ் சந்திர சௌத்திரி சட்டக் கல்லூரி |
மோலோய் கதக் (Moloy Ghatak) அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் மூத்த அரசியல்வாதியும், மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு வங்க அரசின் பொதுப்பணித் துறை மற்றும் சட்டத்துறை அமைச்சரும் ஆவார்.[1]
நிலக்கரி கடத்தல் ஊழல் வழக்கு
[தொகு]மேற்கு வங்க மாநிலத்தின் குனுஸ்டோரியா மற்றும் கஜோரா பகுதிகளில் உள்ள கிழக்கு நிலக்கரி வயல்களிலிருந்து பல கோடி ரூபாய்]] மதிப்புள்ள நிலக்கரி திருடப்பட்ட ஊழல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் மேற்கு வங்க சட்ட அமைச்சர் மோலோய் கதக் மீது நவம்பர் 2020-இல் நடுவண் புலனாய்வுச் செயலகம் குற்ற வழக்கு பதிவு செய்தது. அதனடிப்படையில் பணமோசடி தடுப்பு சட்டம், 2002 இன் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. ஆசன்சோல் மற்றும் கொல்கத்தாவில் உள்ள அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் 7 செப்டம்பர் 2022 (புதன்கிழமை) அன்று சோதனை நடத்தியது.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ministers in Mamata's Cabinet". Government of West Bengal. 21 May 2011. Archived from the original on 5 October 2011. பார்க்கப்பட்ட நாள் 22 May 2011.
- ↑ [https://indianexpress.com/article/cities/kolkata/coal-pilferage-case-cbi-searches-west-bengal-minister-moloy-ghatak-8135710/ Coal smuggling scam: CBI raids residence of Bengal Law Minister Moloy Ghatak
- ↑ {https://www.hindustantimes.com/cities/kolkata-news/bengal-law-minister-moloy-ghatak-raided-by-cbi-grilled-in-coal-smuggling-case-101662556602607.html Bengal law minister Moloy Ghatak raided by CBI, grilled in coal smuggling case]