மொரோக்கோவின் சுவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேற்கு சகாராவின் நிலப்படத்தில் மொரோக்கோ மற்றும் சகாராவிய அரபு சனநாயகக் குடியரசின் பகுதிகளும் கொடிகளும்

மொரோக்கோவின் சுவர் (Moroccan Wall) என்பது மேற்கு சகாராவினூடேயும் மொரோக்கோவின் தென்கிழக்கு பகுதியிலும் ஏறத்தாழ 2,700 கிமீ-நீளத்திற்கு உள்ள (பெரும்பாலும் மணலாலான) சுவர் (அல்லது "கரைத்தட்டு") ஆகும். இது மொரோக்கோ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளையும் (தென் மாநிலங்கள்)[1] போலிசரியோ முன்னணி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளையும் (சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு) பிரிக்கிறது.

மேற்கு சகாராவில் பொது வாக்கெடுப்பிற்கான ஐக்கிய நாடுகளின் பணித்திட்டம் (MINURSO) வெளியிட்ட நிலப்படங்களும்[2] அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் வெளியிட்டப் படங்களும்[3] மூரித்தானியாவின் பன்னாட்டு எல்லைக்குள்ளும் இந்தச் சுவரின் பகுதி பல கிலோமீட்டர்களுக்கு ஊடுருவியிருப்பதைக் காட்டுகின்றன.

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொரோக்கோவின்_சுவர்&oldid=1974572" இருந்து மீள்விக்கப்பட்டது