மொரோக்கோவின் சுவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கு சகாராவின் நிலப்படத்தில் மொரோக்கோ மற்றும் சகாராவிய அரபு சனநாயகக் குடியரசின் பகுதிகளும் கொடிகளும்

மொரோக்கோவின் சுவர் (Moroccan Wall) என்பது மேற்கு சகாராவினூடேயும் மொரோக்கோவின் தென்கிழக்கு பகுதியிலும் ஏறத்தாழ 2,700 கிமீ-நீளத்திற்கு உள்ள (பெரும்பாலும் மணலாலான) சுவர் (அல்லது "கரைத்தட்டு") ஆகும். இது மொரோக்கோ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளையும் (தென் மாநிலங்கள்)[1] போலிசரியோ முன்னணி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளையும் (சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு) பிரிக்கிறது.

மேற்கு சகாராவில் பொது வாக்கெடுப்பிற்கான ஐக்கிய நாடுகளின் பணித்திட்டம் (MINURSO) வெளியிட்ட நிலப்படங்களும்[2] அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் வெளியிட்டப் படங்களும்[3] மூரித்தானியாவின் பன்னாட்டு எல்லைக்குள்ளும் இந்தச் சுவரின் பகுதி பல கிலோமீட்டர்களுக்கு ஊடுருவியிருப்பதைக் காட்டுகின்றன.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "However, with the completion of the Moroccan separation wall in the 1980s,..." "separation+wall"&source=bl&ots=YiUO5Cpfxf&sig=I06JNC8TCsi5EzNdDKNccwD96mU&hl=iw&sa=X&ei=VZa1VNHA
  2. "Deployment of MINURSO" (PDF). Archived from the original (PDF) on 2007-10-27. பார்க்கப்பட்ட நாள் 2015-10-12.
  3. Western Sahara Atlas Map - June 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொரோக்கோவின்_சுவர்&oldid=3569068" இலிருந்து மீள்விக்கப்பட்டது