உள்ளடக்கத்துக்குச் செல்

மொண்டேய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொண்டேய் என்பது இந்தியாவின் ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டத்தில் கொண்டாடப்படும் ஒரு ஆதிவாசி பழங்குடி திருவிழா ஆகும். அதன் பெயர் மண்டி என்ற ஹிந்தி வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. மண்டி என்பதற்கு ஹிந்தி மொழியில் ஒரு சிறிய சந்தை என்று பொருள். பழங்குடியினர் பாரம்பரியமாக இந்த பண்டிகையை அறுவடைக் காலத்தில் நாபரங்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொண்டாடுகின்றனர். இது சில ஒடிசா மாவட்டங்களிலும் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிற இடங்களிலும் கொண்டாடப்படுகிறது

.

கோண்ட், பராஜா, போடோடா, கடோபா மற்றும் கந்தா போன்ற பழங்குடியினர் ஒரு குறிப்பிட்ட நாளில் தங்கள் விவசாய விளைபொருட்களை பரிமாறிக் கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் கிராம தெய்வத்தின் அருகில் தங்கள் முதல் அறுவடையை வைத்து வணங்குகிறார்கள். பின்னர் தங்கள் நெல், சோளம் மற்றும் காய்கறிகளை விற்கச் செல்கிறார்கள். அருகிலுள்ள அனைத்து கிராமங்களிலிருந்தும் மக்கள் கூட்டம் கூடி இப்பண்டிகையைக்க கொண்டாடுவர். சில கலாச்சார நடன நிகழ்ச்சிகளும் அழைப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டும்.

இந்த விழாவின் அடையாளத்தை மாநில அளவிலும் தேசிய அளவிலும் நிலைநிறுத்த, இதை ஊக்குவிக்கும் முயற்சியை நபரங்பூர் மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் வாரத்தில், மாவட்டத் தலைமையகத்தில், ஒரிசா அரசாங்கத்தின் கலாச்சாரத் துறையின் சங்கத்துடன் இந்த திருவிழா நடத்தப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பார்வையாளர்களுக்கு, நாபரங்பூர் மாவட்டத்தின் உட்பகுதியில் இருக்கும் பழங்குடியினரின் நடனங்கள் காட்டப்படுகின்றன. மேலும், பல்வேறு பகுதிகளில் உள்ள கலைஞர்களிடையே கலாச்சார பரிமாற்றமும் நடைபெறுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொண்டேய்&oldid=3669875" இலிருந்து மீள்விக்கப்பட்டது