மைத்திரேய மகா விகாரம், வடக்கு சுமாத்திரா
மைத்ரேய மகா விகாரம் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | காம்பிளக் பெருமகான் செமாரா அஸ்ரி, ஜலான் செமாரா பொலிவார்டு உதாரா எண்.8, மேடன் எஸ்டேட், செர்கட் செய் துவான், டேலி செர்டாங் ரீஜன்சி, வடக்கு சுமத்ரா 20371 |
புவியியல் ஆள்கூறுகள் | 3°38′16.5″N 98°42′04.7″E / 3.637917°N 98.701306°E |
சமயம் | மகாயான பௌத்தம் |
மண்டலம் | சுமத்ரா |
மாகாணம் | வடக்கு சுமத்ரா]] |
ஆட்சிப்பகுதி | டேலி செர்டாங் ரீஜன்சி |
மைத்ரேய மகா விகாரம் (Maha Vihara Maitreya), என்பது மேடனில் அமைந்துள்ள ஒரு புத்த கோவில் ஆகும், இது இந்தோனேசியாவின் மிகப்பெரிய வரலாற்று சார்பற்ற புத்த கோயில் என்று கூறப்படுகிறது. இந்தக் கோயில் பெரும்பாலும் விகாரா செமரா அஸ்ரி என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது செமரா அஸ்ரியின் வீட்டு வளாகத்தில் அமைந்துள்ளது.
துவக்கம்[தொகு]
மைத்ரேய மகா விகாரம் 1991 ஆம் ஆண்டில் 4.5 ஹெக்டேர் பரப்பளவில் கட்டப்பட்டது. இக்கோயில் ஆகஸ்ட் 21, 2008 ஆம் நாளன்று திறந்து வைக்கப்பட்டது.
மைத்ரேயர்[தொகு]
இந்த கோயில் குறிப்பாக மேடனிலும், பொதுவாக வடக்கு சுமத்ராவிலும் பௌத்தத்தைப் பின்பற்றி வருபவர்களுக்கான வழிபாட்டுத் தலமாக உள்ளது. வடக்கு சுமத்ரா நகரத்தில் ஏராளமான சீனர்கள் வாழ்ந்து வருவதால், மைத்ரேயா என்ற பெயருக்கு ஏற்ப, இந்த கோயிலில் மிகவும் பிரபஞ்சத்தில் அன்பைக் கற்பிக்கும் மைத்ரேய புத்தரின் போதனைகள் அதிகம் காணப்படுகின்றன.
இக்கோயில் இந்தோனேசியாவின் மிகப் பெரிய கோயில்களில் ஒன்றாகும். ஆனால் மைத்ரேய மகா விகாரத்தின் உட்புறம் எளிமையான வடிவில் உள்ளது. அமைதியாக அவ்விடம் தருகின்ற சூழல் நிதானமாக வழிபாடு செய்ய மிகவும் துணை புரிகிறது.
மூன்று அறைகள்[தொகு]
இந்தக் கோயில் கட்டிடம் மூன்று முக்கியமான அறைகளைக் கொண்டு அமைந்துள்ளது. முதல் கட்டடத்தில் ஒரு பொதுவான பக்திசாலா உள்ளது. அந்தக் கட்டிடத்தில் 1,500 பேர் இருக்கும் வசதி உள்ளது. அங்கு.புத்தர் சாக்யமுனி, போதிசத்வா மற்றும் போதிசத்வ சத்தியகலமா அவலோகிதேசுவரா ஆகிய மூவரையும் கொண்டு அமைந்துள்ள பொதுவான வழிபாட்டுத் தலமாக இது உள்ளது.
இரண்டாவது கட்டடத்தில் 2,500 பேர் இருக்கின்ற மைத்ரேய பக்திசாலா உள்ளது. இந்த பிரிவில் பக்திசாலாவின் புனித தலைமையைக் காண முடியும்.இக்கட்டடத்தில் கூடுதலாக, ஒரு சிறப்பு சாப்பாட்டு அறை, வரவேற்பறை மண்டபம் ஆகியவை உள்ளன.
இதற்கிடையில், மூன்றாவது கட்டிடம் 2,000 பேர் வசிக்கும் கூட்ட அரங்கினைக் கொண்டு அமைந்துள்ளது. இந்த அனைத்து கட்டிடங்களிலும் விருந்தினர் மாளிகை உள்ளது, அவற்றில் ஒரு கட்டிடத்தில் உள்ள விருந்தினர் மாளிகை மட்டுமே மிக முழுமையான வசதிகளைக் கொண்டுள்ளது, அதில் அலுவலக இடம், கூட்டம் நடக்கின்ற அறைகள், ரெக்கார்டிங் ஸ்டுடியோக்கள் மற்றும் ஒரு சமூக சமையலறை. ஆகியவை அங்கு காணப்படுகின்றன.
இந்த கோயிலில் ஒரு பீனிக்ஸ் மற்றும் டிராகன் போன்ற பல சிலைகள் காணப்படுகின்றன. மடத்தின் சுவர்களில் பல்வேறு டிராகன்கள் மற்றும் புராணக் கதைகளில் காணப்படுகின்ற விலங்குகளின் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கோயிலின் வலது புறத்தில் மிதக்கும் தேனீர் நீரூற்று இருந்தது. [1]
சிறப்பு[தொகு]
தென் கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய புத்தர் கோயிலாக இது கருதப்படுகிறது. மைத்ரேய புத்தரை அமைதியாக வழிபாடு செய்வதற்கான ஏற்ற இடமாக இக்கோயில் அமைந்துள்ளது. மைத்ரேய மகா விகாரத்தில் பல வகையான புத்தர் சிலைகள் பெரிய அளவுகளில் காணப்படுகின்றன. குறிப்பாக மைத்ரேய புத்தரின் சிலைகள் அதிகம் உள்ளன. இக்கோயில் ஐந்து பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது. வழிபாட்டு மண்டபங்கள், சிற்பங்கள் கொண்ட அறைகள் உள்ளிட்டவை இங்கு காணப்படுகின்றன. பிற மதத்தை விரும்பும் சுற்றுலாப் பயணிகள் செல்லும் சிறந்த இடமாக இந்த விகாரம் திகழ்கிறது. விகாரத்தின் வளாகத்தில் ஒரு சைவ உணவகம் உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விகாரத்தின் பகுதிகளில் புகைப்படம் எடுக்க அனுமதி உண்டு. வார இறுதி நாள்களிலும், விடுமுறை நாள்களிலும் இங்கு அதிகமான எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். [2] holidays.