உள்ளடக்கத்துக்குச் செல்

மைக்கல் சாபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மைக்கேல் சாபன் (Michael Chabon) (பிறப்பு: மே 24, 1963) ஒரு அமெரிக்காவைச் சேர்ந்த புதின எழுத்தாளர், திரைக்கதை எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். 2001 ஆம் ஆண்டு புனைக்கதைக்கான புலிற்சர் பரிசை வென்றார்.[1]

மைக்கல் சாபன்
2019 இல் சாபன்
2019 இல் சாபன்
பிறப்புமே 24, 1963 (1963-05-24) (அகவை 61)
வாசிங்டன் டி.சி, ஐக்கிய அமெரிக்கா
தொழில்எழுத்தாளர்
காலம்1987–தற்சமயம் வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்வொண்டர் பாய்ஸ் (1995), தி அமெசிங் அட்வென்சர் ஒப் கவாலியர் அண்ட் க்ளே’’ (2000), டெலிகிராப் அவன்யூ (2012), மூங்லோ (2016)
குறிப்பிடத்தக்க விருதுகள்1999 ஓ. ஹென்றி விருது
2001 புலிட்சர் விருது
2007 சிறந்த புதினத்திற்கான நெபுலா விருது
2008 ஹ்யூகோ விருது
பிள்ளைகள்4
இணையதளம்
michaelchabon.com

ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும்

[தொகு]

மைக்கேல் சாபன் 1963 ஆம் ஆண்டு மே 24 அன்று ஐக்கிய அமெரிக்காவில் வாசிங்டன் டி.சியில் பிறந்தார். இவர் யூத வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது தந்தை ராபர்ட் சாபன் மருத்துவரும், தாயார் ஷரோன் சாபன் வழக்கறிஞரும் ஆவார். சாபனுக்கு 11 வயதாக இருந்தபோது அவரது பெற்றோர் விவாகரத்து செய்தனர். சாபன் பிட்ஸ்பேர்க் மற்றும் கொலம்பியாவின் மேரிலாந்தில் வளர்ந்தார். அவர் தனது தாயின் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளால் பேசப்பட்ட இத்திஷ் மொழியைக் கேட்டு வளர்ந்தார்.[2]

சாபன் பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கு முன் ஒரு வருடம் கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் சக் கிண்டர் என்ற அமெரிக்க புதின எழுத்தாளரின் கீழ் பயின்றார். 1984 ஆம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார்.[3] பின்னர் இர்வின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படைப்பு எழுத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.

எழுத்துப்பணி

[தொகு]

சாபனின் முதல் புதினமான தி மிஸ்டரீஸ் ஆப் பிட்ஸ்பர்க் 1988 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு  விற்பனையில் வெற்றி அடைந்தது.[4] இதனால் சாபன் இலக்கிய பிரபலங்களின் நிலையை அடைந்தார். தி மிஸ்டரீஸ் ஆஃப் பிட்ஸ்பர்க்கின் வெற்றிக்குப் பிறகு பவுன்டன் சிட்டி என்ற புதினத்திற்காக ஐந்தாண்டுகள் பணியாற்றினார். 1995 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த புத்தகம் வணிகரீதியான மற்றும் விமர்சன ரீதியான வெற்றியைப் பெற்றது.[5] 1999 ஆம் ஆண்டில் அவர் தனது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான வெர்வொல்வ்ஸ் இன் த யூத் என்ற புத்தகத்தை வெளியிட்டார். 2000 ஆம் ஆண்டில், தி அமேசிங் அட்வென்ச்சர்ஸ் ஆஃப் காவலியர் அன்ட் கிளே என்ற வரலாற்று புதினத்தை வெளியிட்டார். அமோக பாராட்டுக்களைப் பெற்ற இந்த புதினம் நியூயார்க் டைம்ஸின் சிறந்த விற்பனை புத்தகமாக தெரிவு செய்யப்பட்டது.[3] மேலும் 2001 ஆம் ஆண்டில் புலிட்சர் பரிசை வென்றது. சாபன் 2002 ஆம் ஆண்டில் இளம் வாசகர்களுக்கான சம்மர்லேண்ட் என்ற கற்பனை புதினத்தை வெளியிட்டார். இந்த புத்தகம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் விற்பனையில் வெற்றி பெற்றது.[6]  

சம்மர்லேண்ட் 2003 ஆம் ஆண்டு மிதோபொயிக் பெண்டசி விருதை வென்றது. 2016 ஆம் ஆண்டு நவம்பர் 22 அன்று மூங்லோ என்ற புதினம் வெளியிடப்பட்டது.[7] சாபனின் சமீபத்திய புனைகதை அல்லாத புத்தகமான புக்கண்ட்ஸ்: கெலக்டட் இன்டரோஸ் அன்ட்  அவுட்ரோஸ் 2019 ஆம் ஆண்டு சனவரியில் வெளியிடப்பட்டது. 2012 ஆம் ஆண்டின் ஒரு நேர்காணலில் சாபன் ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி முதல் அதிகாலை 3 மணி வரை, ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை எழுதுவதாக கூறினார்.[8]

விருதுகள்

[தொகு]

1997 - சர்வதேச டப்ளின் இலக்கிய விருது

1999 - ஓ. ஹென்றி விருது மூன்றாம் பரிசு

2000 - தேசிய புத்தக விமர்சகர்கள் வட்ட விருது

2000 - கலிபோர்னியா புத்தக விருது

2001 - பென்/பாலக்னர் விருது

2002 - சர்வதேச டப்ளின் இலக்கிய விருது

2007 - சலோன் புத்தக விருது

2007 - கலிபோர்னியா புத்தக விருது (புனைகதை)

2008 - சிறந்த புதினத்திற்கான நெபுலா விருது

2008 - சிறந்த புதினத்திற்கான ஹ்யூகோ விருது

2009 - சர்வதேச டப்ளின் இலக்கிய விருது

2010 - வடக்கு கலிபோர்னியா புத்தக விருது

2012 -டெலிகிராப் 2012 சிறந்த புத்தகங்கள் (டெலிகிராப் அவென்யூவுக்கு)

2012 - இலண்டன் ஈவினிங் ஸ்டான்டர்ட் புக்ஸ் ஆஃப் தி இயர் 2012 பட்டியல் ( டெலிகிராப் அவென்யூவுக்கு)

2012 - ஹாலிவுட்.காம் 2012 பட்டியலின் சிறந்த புத்தகம். (டெலிகிராப் அவென்யூவுக்கு)

2012 - நியூயார்க டைம்ஸ் 100 குறிப்பிடத்தக்க புத்தகங்கள் 2012 (புனைகதை மற்றும் கவிதை) (டெலிகிராப் அவென்யூவுக்கு)

2012 - குட் ரீட்ஸ் சாய்ஸ் விருதுகள்

2013 - லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் புத்தக பரிசு 2012 (புனைகதை) இறுதி ( டெலிகிராப் அவென்யூவுக்கு)

2017 - சர்வதேச டப்ளின் புத்தக விருது

2017 - தேசிய புத்தக விமர்சகர்கள் வட்ட விருது

2017 - கலிபோர்னியா புத்தக விருது தங்க பரிசை வென்றார்

2018 - சர்வதேச டப்ளின் புத்தக விருது

குறிப்புகள்

[தொகு]
  1. "VQR » From Pittsburgh to Sitka: On Michael Chabon's The Yiddish Policemen's Union". web.archive.org. 2009-03-02. Archived from the original on 2009-03-02. பார்க்கப்பட்ட நாள் 2019-10-26.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "Jews on ice". Salon (in ஆங்கிலம்). 2007-05-04. பார்க்கப்பட்ட நாள் 2019-10-26.
  3. 3.0 3.1 "Michael Chabon Chabon, Michael (Contemporary Literary Criticism) - Essay - eNotes.com". eNotes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-26.
  4. "Able to Leap over Literary Barriers in a Single Book: Chabon Ranges from Kabbalah to Captain Nemo". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  5. "Michael Chabon". The A.V. Club. பார்க்கப்பட்ட நாள் 2019-10-26.
  6. "The idea hit him right in the kishkes". Los Angeles Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2007-05-01. பார்க்கப்பட்ட நாள் 2019-10-26.
  7. "Moonglow - Michael Chabon - Hardcover". HarperCollins Publishers: World-Leading Book Publisher (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-26.
  8. "Michael Chabon Journeys Back To 'Telegraph Avenue'". NPR.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கல்_சாபன்&oldid=3484611" இலிருந்து மீள்விக்கப்பட்டது