உள்ளடக்கத்துக்குச் செல்

மைக்கல் ஃபெல்ப்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்கல் ஃபெல்ப்ஸ்
Michael Phelps

2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஃபெல்ப்ஸ்

Personal information
முழுப்பெயர்: மைக்கல் ஃபிரெட் ஃபெல்ப்ஸ் II
பட்டப்பெயர்கள்: பால்ட்டிமோர் புல்லெட்[1]
தேசியம்: அமெரிக்கர்
வீச்சு\அடிப்பு: பட்டாம்பூச்சி பாணி, தனிநபர் கலப்பு வீச்சு, கட்டற்ற பாணி, பின்னோக்கிய கைவீச்சு
அணி: வொல்வெரின் கிளப்,
மிச்சிகன் பல்கலைக்கழகம்
பிறப்பு: சூன் 30, 1985 (1985-06-30) (அகவை 39)
பிறந்த இடம்: பால்ட்டிமோர், மேரிலண்ட்,  ஐக்கிய அமெரிக்கா
உயரம்: 6 அடி 4 அங் (1.93 மீ)
எடை: 185 பவுண்டு (85 கிகி)[2]

மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ் II (மைக்கல் பிரெட் பெல்ப்சு II) (Michael Fred Phelps II, பி ஜூன் 30, 1985, பால்ட்டிமோர், மேரிலன்ட்) பல நீச்சல் வகைகளில் உலக சாதனைகளைப் படைத்த அமெரிக்க நீச்சல் வீரர் ஆவார். 28 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்ற ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிக தங்கப் பதக்கம் பெற்றவர் ஆவார்.

ஏதென்ஸ், கிரீசில் நடந்த 2004 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 8 பதக்கங்களை (6 தங்கம், 2 வெண்கலம்) வென்றார். 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். ஓராண்டின் ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற மிகக் கூடிய தங்கப் பதக்க எண்ணிக்கை இதுவேயாகும். 2012 ஒலிம்பிக்கில் 6 பதக்கங்களையும் (4 தங்கம், 2 வெள்ளி) 2016 ஒலிம்பிக்கில் 5 பதக்கங்களையும் (4 தங்கம், 1 வெள்ளி) பெற்றார். எல்லாமாக 27 பதக்கங்களைப் பெற்று, அதிக பதக்கம் பெற்றோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

மைக்கல் ஃபெல்ப்ஸ்

ஓர் ஒலிம்பிக்கில் ஒருவர் பெற்ற அதிகூடிய பதக்க எண்ணிக்கையான 8 பதக்கங்களை பெல்ப்ஸ் இருதடவை பெற்றுள்ளார். இரசியரான அலெக்சாந்தர் டித்யாதின் ஓர் ஒலிம்பிக்கில் 8 பதக்கம் பெற்ற இன்னொருவர்.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Harris, Nick. "'Baltimore Bullet' has history in his sights". Baltimore Sun. 2008-08-11.
  2. "National Team Bios". USA Swimming. Archived from the original on 2012-04-05. பார்க்கப்பட்ட நாள் 2012-08-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கல்_ஃபெல்ப்ஸ்&oldid=3568933" இலிருந்து மீள்விக்கப்பட்டது