மேல்பட்டி பாறை ஓவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மேல்பட்டி பாறை ஓவியங்கள் என்பது தமிழத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரியிலிருந்து மகாராஜாகடை ஊருக்கு செல்லும் வழியில் 4 கி.மீ தொலைவில் மேல்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு பாறை ஓவியம் ஆகும்.[1] இது இந்த ஊாில் இடதுபுறமுள்ள சிறு குன்றில் மங்கா கவியில் (கவி என்றால் குகை என்று பொருள் ) என்னும் குகையில் இப்பாறை ஓவியங்கள் அமைந்துள்ளன. தோராயமாக 5000ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாக கருதப்படும் இவ்வெண்சாந்து ஓவியத்தில் பலவித வளமை குறியீடுகளும், சூரிய சந்திர குறியீடுகளும், கழுதைமீது அமர்ந்து செல்லும் போர்வீரனின் ஓவியமும், தூரிகையின்றி விரலால் புனைந்த ஓவியம் என்பதை பிரதிபலிக்கும் வகையில் வரைந்தவனின ஐவிரலும் வரையப்பட்டுள்ளது. இக்குகையில் முந்தைய தலைமுறையினை சேர்ந்த மூதாட்டி ஒருவர் காளியம்மனாக கல்நட்டு வழிபட்டு வந்துள்ளார். இதனையொட்டி வற்றாத நீருற்று ஒன்று இருந்துள்ளது. கடந்த பத்துவருடத்தில் இது வற்றிவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த மலையை கற்களுக்காக உடைத்து வருகின்றனர். மலையின் நடு உச்சியில் அமைந்துள்ள குகையில் தெய்வசிலை உள்ளதால் இதுவரை இந்தக் குகை உடைக்கப்படாமல் உள்ளது.

மேற்கோள்[தொகு]

  1. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=77017 தினகரன் 27.01.2014