மேற்பரப்பு இழுவிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பரப்பு இழுவிசை காரணமாக நீரில் மிதக்கும் இரும்பு

மேற்பரப்பு இழுவிசை (surface tension) என்பது நீர்மத்தின் மேற்பரப்பு புறவிசையை எதிர்க்கின்ற பண்பு. நீர்மத்தின் ஓரலகுப் பரப்பில் உணரப்படும் விசையே பரப்பு இழுவிசை என்று இதை வரையறுக்கலாம். இது நீர்ம (திரவ) மூலக்கூறுகளிடையே உள்ள தன்னினக் கவர்ச்சி விசையால் உண்டாகிறது. இதனால் நீர்மத்தை விட அதிக அடர்த்தி உடைய பொருட்கள் அந்த நீர்மத்தில் மிதக்க முடியும்.

பரப்பு இழுவிசையின் அடிப்படை

ஒரு நீர்மத்தின் உட்பகுதியில் உள்ள மூலக்கூறுகள் மற்ற எல்லா மூலக்கூறுகளாலும் எல்லாத் திசையிலும் சமமாக இழுக்கப்படுகின்றன. எனவே நிகர விசை சுழி ஆகும். ஆனால் நீர்மப் பரப்பில் உள்ள மூலக்கூறோ உள்நோக்கியவாறே இழுக்கப்படுகின்றது. இதனால் நீர்மப்பரப்பில் இறுக்கம் உணரப்படுகிறது.

மேற்பரப்பிழுவிசை பரிமாணமுள்ள ஒரு கணியமாகும். இதன் பரிமாணம் விசையின் கீழ் தூரத்தின் அடிப்படையில் உள்ளது. அல்லது சக்தியின் கீழ் பரப்பினாலும் அளக்கப்படுகின்றது. இவை இரண்டும் ஒரே பரிமாணமான MT−2வையே குறித்தாலும், சக்தியின் கீழ் பரப்பு எனும் பரிமாணம் திண்மங்களுக்கும் பொருத்தமானதாகும்.

அன்றாட இயற்பியல்[தொகு]

  • நீரில் நடக்கக் கூடிய சில பூச்சிகள் நீரின் பரப்பு இழுவிசை காரணமாகவே அவ்வாறு செய்ய இயல்கிறது.
  • குளியல் மற்றும் சலவை சோப்பு நீரின் பரப்பு இழுவிசையைக் குறைத்து விடுகிறது. இதனால் தான் சோப்பு நீரில் உண்டாகும் குமிழி வெகு நேரம் நிலைத்து நிற்கிறது.
  • மழைத் துளியாயினும் குழாயிலிருந்து சொட்டும் நீர்த்துளியாயினும் கோள வடிவில் இருக்கக் காரணம் பரப்பு இழுவிசையே. ஏனெனில் குறைந்த பரப்பளவில் அதிக கனஅளவுள்ள வடிவம் கோள வடிவமே.

அன்றாட வாழ்வில் நீரே மிக முக்கியமான மேற்பரப்பிழுவிசையுள்ள திரவமாகும். மேற்பரப்பிழுவிசை பொருளின் நிறைக்குச் சமனாகுமானால் அடர்த்தி கூடிய பொருளும் திரவத்தில் மிதக்கக்கூடும். இதனாலேயே நீரை விட அடர்த்தி கூடிய நீர்ப்பூச்சியும் நீரில் மிதக்கின்றது.

இயற்பியல்[தொகு]

இயற்பியல் அலகுகள்[தொகு]

γ (காமா) என்ற கிரேக்கக் குறியீட்டால் இயற்பியலில் மேற்பரப்பிழுவிசை குறிக்கப்படுகின்றது. ஒரு அலகு தூரத்துக்கான விசையை மேற்பரப்பிழுவிசை குறிக்கின்றது. மேற்பரப்பிழுவிசையின் சர்வதேச அலகு நியூட்டனின் கீழ் மீற்றராகும் (Nm−1). dyn/cm (dyne per centimeter) என்ற அலகும் இதனை அளவிடப் பயன்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்பரப்பு_இழுவிசை&oldid=2745349" இருந்து மீள்விக்கப்பட்டது