மேகனா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
A map showing major rivers in Bangladesh including Meghna.

மேகனா ஆறு (Meghna River) வங்காளதேசத்தின் மிக முக்கியமான நதிகளில் ஒன்றாகும். இந்த ஆறு கங்கைச் சமவெளியை உருவாக்கும் மூன்று பெரிய ஆறுகளுள் ஒன்றாகும்.[1] பங்களாதேஷின் உள்பகுதியில் இந்த ஆறு உற்பத்தி ஆகிறது. கிசோர்கஞ்ச் மாவட்டத்தில் பைராப் பசார் என்ற நகரத்திற்கு மேலே மேகனா உருவாகிறது. மேகனா அதன் பிரதான துணை ஆறான பத்மா ஆற்றை சந்திரபூர் மாவட்டத்தில் சந்திக்கிறது. மேகனாவின் பிற முக்கிய துணைப் ஆறுகள் தலேஷ்வரி, கும்டி மற்றும் பெனி ஆறு ஆகியவை ஆகும். போலா மாவட்டத்தில் டெகூலியா (இல்ஷா), சாபாஸ்பூர், ஹாடியா மற்றும் பாம்னி என நான்கு முக்கிய முகத்துவாரங்கள் வழியாக மேகனா வங்கக் கடலில் கலக்கிறது. வங்காளதேச எல்லைகளுக்குள் ஓடும் மேகனா ஒரு பரந்தஆறு ஆகும். போலா அருகில் ஒரு கட்டத்தில், மேகனா 12 கி.மீ பரப்பளவில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Masud Hasan Chowdhury (2012). "Meghna River". in Sirajul Islam and Ahmed A. Jamal. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Meghna_River. பார்த்த நாள்: 27 February 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகனா_ஆறு&oldid=3735395" இலிருந்து மீள்விக்கப்பட்டது