பெனி ஆறு

ஆள்கூறுகள்: 22°46′N 91°26′E / 22.767°N 91.433°E / 22.767; 91.433
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெனி ஆறு
பெயர்ফেনী নদী (வங்காள மொழி)
அமைவு
நாடுகள்வங்காளதேசம் மற்றும் இந்தியா
வங்காளதேசம்கக்ராச்சாரி மாவட்டம்
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுகக்ராச்சாரி மாவட்டம், வங்காளதேசம்
 ⁃ ஆள்கூறுகள்23°20′N 91°47′E / 23.333°N 91.783°E / 23.333; 91.783[1]
முகத்துவாரம்வங்காள விரிகுடா
நீளம்116 km (72 mi)[1]
வெளியேற்றம் 
 ⁃ அமைவுவங்காள விரிகுடா
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ வலதுமுகுரி ஆறு


பெனி ஆறு (Feni River) (வங்காள மொழி: ফেনী নদী வடகிழக்கு இந்தியாவின் ஏழு சகோதரி மாநிலங்களில் ஒன்றான திரிபுரா மாநிலத்தின் தெற்கு திரிப்புரா மாவட்டத்தின் மலைகளில் உற்பத்தி ஆகி, சப்ரூம் நகரத்தின் வழியாக[2] [, வங்காளதேச நாட்டின் கக்ராச்சாரி மாவட்டத்தின் ஊடாகப் பாய்ந்து, முடிவில் நவகாளி மாவட்டம் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன் துணை ஆறு முகுரி ஆறு ஆகும். பெனி ஆற்றின் மொத்த நீளம் 116 கிலொ மீட்டர் (72 மைல்) ஆகும். பெனி ஆற்றில் உள்ளூர் படகுப் போக்குவரத்து நடைபெறுகிறது.

இந்தியா மற்றும் வங்காளதேசம் பெனி ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்வது பற்றிய தீர்வு இதுவரை எட்டப்படவில்லை. [3][4]

மேற்கோள்கள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=பெனி_ஆறு&oldid=3124248" இருந்து மீள்விக்கப்பட்டது