மெஸ்சீன்
பண்டைய மெஸ்சீன் Αρχαία Μεσσήνη | |
---|---|
பண்டைய அஸ்க்லெபியனின் எச்சங்கள். | |
அமைவிடம் | |
அரசாண்மை | |
நாடு: | கிரேக்கம் |
நிர்வாக வலயம்: | பெலொப்பொனேசியா |
மண்டல அலகு: | Messenia |
நகராட்சி: | Messini |
நகராட்சி அலகு: | Ithomi |
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1] | |
சமூகம் | |
- மக்கள்தொகை: | 196 |
Other | |
நேர வலயம்: | EET/EEST (UTC+2/3) |
உயரம் (min-max): | 119–800 m (390–2625 ft) |
அஞ்சல் குறியீடு: | 240 02 |
மெஸ்சீன் (Messene, ( கிரேக்கம் : Μεσσήνη Messini ), அதிகாரப்பூர்வமாக பண்டைய மெஸ்சீன் என்பது கிரேக்கத்தின் பெலோபொன்னீசின் பிராந்தியத்தில் மெசேனிய பிராந்திய அலகுக்குள் ( perifereiaki enotita ) உள்ள ஒரு பண்டைய நகரம் ஆகும். [2]
மெஸ்சீனினானது அங்குள்ள பெரிய பாரம்பரிய நகர அரசின் இடிபாடுகளுக்கு மிகவும் பிரபலமானது. இந்த தளம் வெண்கல காலத்தில் நிறுவப்பட்டது. இது முதலில் அக்கீயயன் கிரேக்கர்களின் பண்டைய நகரமாகும். இது இறுதியில் எசுபார்த்தாவின் இராணுவ அரசின் மேலாதிக்கத்தின் கீழ் வந்தது, அதனுடன் அது நீண்ட போராட்டத்தை நடத்தியது. ஆதன் பிந்தைய காலத்தில் பல குடிமக்கள் நாடுகடத்தப்பட்டனர். இறுதியில் நகரம் எசுபார்த்தன்களால் அழிக்கப்பட்டு சிறிது காலத்தில் கைவிடப்பட்டது.
லியூக்ட்ரா சமரில் (கிமு 371) எசுபார்த்தன்கள் தோற்கடிக்கப்பட்ட பிறகு, தீபன்கள் பெலோபொன்னீசியா மீது படையெடுத்தனர். [3] அதன்பின்னர் தீபன் தளபதியான எபமினோண்டாசு கிமு 369 இல் அந்த நகரத்தின் இடிபாடுகளுக்கு மேல் புதிய மெஸ்சீன் நகரத்தை உருவாக்கினார். அதுமட்டுமல்லாது அதன் முந்தைய குடிமக்களையும், அவர்களின் சந்ததியினரையும் மீண்டும் குடியமர்த்தினார்.
இங்குள்ள கணிசமான இடிபாடுகள் ஒரு முக்கிய வரலாற்று ஈர்ப்பாக உள்ளது. தொல்லியல் ரீதியாக அகழ்வாய்வு செய்யப்பட்டு ஓரளவு மீட்கப்பட்டது அல்லது ஆய்வு மற்றும் பொது மக்களின் பார்வைக்காகவும், பல்வேறு நிகழ்வுகளுக்காகவும் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இத்தளம் எப்போதும் முழுமையாக கைவிடப்படவில்லை. மவ்ரோமதி என்ற சிறிய கிராமம் கிளெப்சிட்ரா என்ற நீரூற்றைச் சுற்றியுள்ள மேல் நகரப்பகுதியில் உள்ளது.
நிலவியல்
[தொகு]அர்ச்சையா மெஸ்சீன் கலாமாடாவிற்கு வடக்கே 25 கிலோமீட்டர்கள் (16 மைல்கள்) தொலைவிலும், பைலோசுக்கு கிழக்கே 60 கிலோமீட்டர்கள் (37 மைல்கள்) தொலைவிலும் அமைந்துள்ளது.
தொல்லியல்
[தொகு]கிரேக்க விடுதலைப் போரின் முடிவில், குய்லூம்-ஏபெல் புளூட்டின் வழிகாட்டுதலின் கீழ், மோரியா எக்ஸ்பெடிசனின் பிரெஞ்சு அறிவியல் ஆணையத்துடன், 1829 ஏப்ரல் 10 இல் தளத்தின் அகழ்வாய்வு தொடங்கியது. [4]
என்றாலும் தளத்தின் முறையான அகழ்வாய்வை முதன்முதலில் 1895 இல் ஏதென்ஸ் தொல்லியல் சங்கத்தின் தெமிஸ்டோக்லிஸ் சோஃபோலிஸ் மேற்கொண்டார். அதன் பின்னர், ஜார்ஜ் ஒய்கோனோமோஸ் (1909 மற்றும் 1925 இல்), அனஸ்டாசியோஸ் ஓர்லாண்டோஸ் (1957 இல்) மற்றும் பெட்ரோஸ் தெமிலிஸ் (1986 இல்) போன்ற பல குறிப்பிடத்தக்க தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வுகளில் பங்களித்துள்ளனர். [5] அவர்களின் பரந்த அளவிலான கண்டுபிடிப்புகள் கொண்ட அருங்காட்சியகம் பழைய நகரச் சுவர்களுக்குள் கட்டப்பட்டுள்ளது.[சான்று தேவை]
இந்த தளத்திற்கு 2011 இல் கலாச்சார பாரம்பரியத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய பரிசு / யூரோபா நோஸ்ட்ரா விருது வழங்கப்பட்டது. [6] [7]
2020-21 ஆம் ஆண்டில், அஸ்க்லெபியஸின் டெமினோஸ் மற்றும் ஆரம்பகால கிறிஸ்தவ தேவாலயத்தின் அகழ்வுகள் சைப்ரசின் திறந்த நிலை பல்கலைக்கழகத்தால் வழிநடத்தப்பட்டன. [8]
குறிப்புகள்
[தொகு]- ↑ Detailed census results 2011 (கிரேக்கம்)
- ↑ "ΦΕΚ B 1292/2010, Kallikratis reform municipalities" (in கிரேக்கம்). Government Gazette. p. 17436.
- ↑ Chisholm 1911.
- ↑ Abel Blouet, Expedition scientifique de Morée ordonnée par le Gouvernement Français ; Architecture, Sculptures, Inscriptions et Vues du Péloponèse, des Cyclades et de l'Attique, Abel Blouet, Amable Ravoisié, Achille Poirot, Félix Trézel et Frédéric de Gournay, Volume I, Firmin Didot, Paris, 1831.
- ↑ Themelis 2010.
- ↑ "EU Prize for Cultural Heritage / Europa Nostra Awards 2011". Archived from the original on 2014-06-01. பார்க்கப்பட்ட நாள் 2014-06-02.
- ↑ "Winners of 2011 EU Prize for Cultural Heritage / Europa Nostra Awards honoured". Press release. European Commission. 10 June 2011. பார்க்கப்பட்ட நாள் 25 July 2021.
- ↑ https://late-antique-worlds.ouc.ac.cy/