மெலானின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருநிறமி (மெலானின், Melanin) ஓர் பழுப்பு கலந்த கருப்பு நிறமுடைய நிறமியாகும். இது ஹீமோகுளோபினற்ற பொருள். இந்நிறமி உரோமம், தோல், கண்ணின் கோராய்டு உறை, ஆகிய பகுதிகளில் உள்ளது. இவை மெலனோபோர் எனும் செல்களினுள் சிறு துகள்களாகச் சேமிக்கப்படுகின்றன. இச்செல்கள் தோலின் கீழுள்ள டெர்மிஸ் பகுதியில் உள்ளன. இச்செல்களில் டைரோசின் எனும் அமினோ அமிலத்திலிருந்து மெலானின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கென டைரோசினேஸ் என்சைம் அச்செல்களில் அமைந்துள்ளது.

டைரோசின் + டைரோசினேஸ் = மெலானின்

மெலானின் நிறமி தோற்றத்தில் உள்ள குறைபாடுகளால் நிறம் அதிகரிப்போ அல்லது நிறம் குறைதலோ நிகழலாம்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெலானின்&oldid=3591291" இலிருந்து மீள்விக்கப்பட்டது