மெரீனா 101

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெரினா 101
Marina 101
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைநிறைவு
இடம்ஐக்கிய அரபு அமீரகம் துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
கட்டுமான ஆரம்பம்2007
நிறைவுற்றது2017
உயரம்
கட்டிடக்கலை425 m (1,394 அடி)
மேல் தளம்371 m (1,217 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை101, ஆறு தரைமட்ட தளங்கள்
தளப்பரப்பு120,706 m2 (1,299,269 sq ft)
உயர்த்திகள்29
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)தேசியப் பொறியியல் பணியகம்
உட்புற வடிவமைப்பாளர்: வடிவமைப்பு ஆக்குநர்கள்
மேம்பாட்டாளர்செபீல்டு ஓல்டிங்சு நிறுவனம்
முதன்மை ஒப்பந்தகாரர்டிஏவி கட்டுமான நிறுவனம்
மேற்கோள்கள்
[1]

மெரீனா 101 (Marina 101) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாய் மெரீனா மாவட்டத்தில் துபாய் நகரில் அமைந்துள்ள ஒரு வானளாவிய கட்டிடமாகும். 425 மீட்டர் அல்லது 1394 அடி உயரம் கொண்ட இக்கட்டடத்தில் 101 அடுக்குகள் உள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இரண்டாவது மிக உயரமான கட்டிடம் என்ற சிறப்பு இக்கட்டடத்திற்கு உண்டு. புர்ச்சு கலிஃபா முதலாவது உயரமான வானளாவியாகும். 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, மெரினா 101 உலகின் 32 ஆவது உயரமான கட்டிடமாகும் . இதன் கட்டுமானம் 2007 ஆம் ஆண்டில் தொடங்கியது. 2014 ஆம் ஆண்டில் முடிக்க முதலில் திட்டமிடப்பட்டது. கட்டுமான ஒப்பந்தத்தில் இருந்த செப்பீல்டு ஓல்டிங்க்சு நிறுவனத்தார் நிதி மூலதனம் இல்லாமல் போன காரணத்தால் கட்டடம் முழுமையடையாமல் நின்றது. [2] [3] [4] [5] கட்டடம் தேசிய பொறியியல் பணியகத்தால் வடிவமைக்கப்பட்டது. துருக்கிய கூட்டு நிறுவனமான டிஏவி கட்டுமான நிறுவனத்தால் கட்டுமானம் செய்யப்பட்டது. [6]

வானளாவிய கட்டிடத்தின் முதல் 33 தளங்கள் 281 அறைகளுடன் 5-நட்சத்திர ஆர்டு ராக் விடுதியை நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 34 முதல் 100 வரையிலான தளங்களில் குடியிருப்புகள் உள்ளன. [7] விடுதி கோபுரத்தில் ஐந்து உணவகங்களைத் தவிர, 252 ஒரு படுக்கையறை அறைகள், 204 இரண்டு படுக்கையறை அறைகள் மற்றும் 42 மூன்று படுக்கையறை அறைகள் கொண்ட குடியிருப்புகள் 97 முதல் 100 ஆவது மாடி வரை இடம்பெற்றுள்ளன. இதை தவிர 6 இரட்டை மாட்டி குடியிருப்பு வீடுகளும் இதில் இட்டம்பெற்றுள்ளன. [8] வானளாவிய கட்டிடத்தின் 101 ஆவது மாடியில் ஒரு மன்ற ஓய்வறையும் , உணவகம் மற்றும் ஒரு வணிகக் கடை போன்றவை உள்ளன. [9]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Marina 101". CTBUH. பார்க்கப்பட்ட நாள் 2013-01-12.
  2. "Banks take control of 101-storey Dubai Marina tower as owners await possession of flats". gulfnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-04.
  3. "Dubai's Marina 101: Lenders look for a new developer to complete city's second tallest skyscraper". The National (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-04.
  4. Parag Deulgaonkar. "Video: @ 465m high... Marina's tallest tower". Emirates 24-7.
  5. "UAE ranked 4th globally in terms of skyscrapers". Look up. 7 January 2018. Archived from the original on 24 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 20 January 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Sheffield Holdings Limited awards Dhs1.1bn contract for Marina 101 to TAV Construction". AMEinfo. 2008-08-17. Archived from the original on 9 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-12-23.
  7. "Hard Rock Hotel set to open in Dubai Marina". ArabianBusiness.com. 27 October 2014. பார்க்கப்பட்ட நாள் 29 October 2014.
  8. Parag Deulgaonkar. "World's tallest hotel apartment in Dubai Marina by 2013". Emirates 24-7.
  9. "Hard Rock Hotel headed to Dubai Marina". The National. 27 October 2014. பார்க்கப்பட்ட நாள் 29 October 2014.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெரீனா_101&oldid=3633266" இலிருந்து மீள்விக்கப்பட்டது