மெய்நிகர் பெருங்குடல் நோக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெய்நிகர் பெருங்குடல் நோக்கி
இடையீடு
MeSHD023881

மெய்நிகர் பெருங்குடல் நோக்கி (Virtual colonoscopy) என்பது சி.டி. ஸ்கேன் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நிகழ்நேரத்தில் பெருங்குடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பரிசோதிக்கும் முறை.

X-கதிர்கள் மற்றும் கணிணி உதவியுடன் நோயாளியின் பெருங்குடல் பகுதியை மருத்துவர் முப்பரிமாணத் தோற்றத்தில் ஆராயலாம்.

நிறைகள்[தொகு]

பலருக்கும் தங்கள் ஆசனவாய் வழியாக பெருங்குடல் அகநோக்கி குழாயை நுழைத்துப் பரிசோதிப்பது பிடிக்காது. மெய்நிகர் பெருங்குடல் நோக்கி இக்குறையைச் சரி செய்கிறது. அத்தோடு வழக்கமான அகநோக்கியினால் பெருங்குடலின் உட்பகுதியை மட்டுமே காண இயலும். ஆனால் மெய்நிகர் பெருங்குடல் நோக்கியால் பெருங்குடல் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளையும் காண இயலும்.

குறைகள்[தொகு]

வழக்கமான பெருங்குடல் அகநோக்கிப் பரிசோதனையின் போது ஏதேனும் புற்றுக் கட்டி போல் தோற்றம் ஏற்பட்டால் அதை எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்ப முடியும். மெய்நிகர் பெருங்குடல் நோக்கியில் இது இயலாது. அத்தோடு இது நோயாளியைக் கதிர்வீச்சுக்கும் ஆளாக்குகிறது.