மெய்ஞ்ஞானப் புலம்பல்
தோற்றம்
மெய்ஞ்ஞானப் புலம்பல் என்பது பத்திரகிரியார் என்ற சித்தரால் பொ.ஊ. 11-ஆம் நூற்றாண்டில் பாடப்பெற்ற பாடல்கள் ஆகும். இந்த நூல் கடவுள் வாழ்த்துக் கண்ணி நீங்களாக 231 கண்ணிகளைக் கொண்டது. இந்தக் கண்ணிகள் ஊடாகப் பல மெய்யியல் கருத்துகள் கூறப்படுகின்றன.
பாடல் எடுத்துக்காட்டுகள்
[தொகு] மனதைஒரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி
என தறிவைஅம்பாக்கி எய்வது இனி எக்காலம் ? 161
வேதாந்தவேதம் எல்லாம் விட்டொழிந்தே நிட்டையிலே
ஏகாந்தமாக இருப்பதினி எக்காலம் ? 032
அறிவை அறிவால் அறிந்தே அறிவும் அறிவுதனில்
பிறிவுபட நில்லாமல் பிடிப்பதுஇனி எக்காலம் ? 192
பிறப்பும் இறப்பும்அற்றுப் பேச்சும்அற்று மூச்சும்அற்று
மறப்பும் நினைப்பும்அற்று மாண்டிருப்பது எக்காலம் ? 206