மெத்தில் தயோயுராசில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெத்தில் தயோயுராசில்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
6-மெத்தில்-2-தயாக்சோ-2,3-ஈரைதரோபிரிமிடின்-4(1)-ஒன்
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 56-04-2
ATC குறியீடு H03BA01
பப்கெம் CID 667493
ChemSpider 580871
UNII QW24888U5F Y
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் C19265 Y
ChEMBL CHEMBL1330588
வேதியியல் தரவு
வாய்பாடு ?

மெத்தில் தயோயுராசில் (Methylthiouracil) என்பது ஒரு கரிமக்கந்தகச் சேர்மமாகும். தைராய்டு எதிர்ப்பிகள் தயாரிப்பில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.

புரோப்பைல் தயோயுராசில் என்ற மருந்துடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு தயோவமைடு என்று இச்சேர்மம் கருதப்படுகிறது. அமெரிக்காவில் மெத்தில் தயோயுராசில் மருந்து மருத்துவ ரீதியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. இது புரோப்பைல் தயோயுராசில் என்ற மருந்துடன் ஒத்த நடவடிக்கைகளையும் பக்க விளைவுகளின் பொறிமுறைகளையும் கொண்டுள்ளதாக அங்கு பார்க்கப்படுகிறது. தைராய்டு சுரப்பியில் தைரோகுளோபுலின் போன்ற சேமிக்கப்பட்ட தைராய்டு இயக்குநீர் உருவாக்கத்தை குறைக்கும் நடவடிக்கையில் இந்த மருந்து ஈடுபடுகிறது.

மிகைக் கேடையச் சுரப்பி நோய் நிலைக்கு சிகிச்சையளிப்பதற்காக இம்மருந்தைப் பயன்படுத்துகையில் தைரோகுளோபுலின் இருப்பு மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து, இரண்டு வாரங்கள் வரை தைராய்டு இயக்குநீரை தாமதமாகச் சுரக்கச் செய்யும் என்பது இதன் மருத்துவ விளைவாகும்.

தயாரிப்பு[தொகு]

எத்தில் அசிட்டோவசிட்டேட்டுடன் தயோயூரியாவைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் மெத்தில் தயோயுராசில் எளியமுறையில் உருவாகிறது. [1]

மெத்தில் தயோயுராசில் தயாரிப்பு வினை :[2]

இவ்வொடுக்க வினையை தொடர்ந்து நிகழ்த்தினால் கொழுப்புசார் பக்கச்சங்கிலிகள் இணைவதைக் காணலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Synthesis of nucleosides". Organic reactions 55: 1-630. April 2004. doi:10.1002/0471264180.or055.01. 
  2. "I. Zur Condensation von Thioharnstoff und Acetessigäther.". Justus Liebigs Annalen der Chemie 236 (1–2): 1–32. 1886. doi:10.1002/jlac.18862360102. https://zenodo.org/record/1934608/files/article.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெத்தில்_தயோயுராசில்&oldid=3145500" இலிருந்து மீள்விக்கப்பட்டது