உள்ளடக்கத்துக்குச் செல்

மெத்தில்பெண்டீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெத்தில்பெண்டீன் (Methylpentene) என்பது C6H12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் அல்கீன் ஆகும். மெத்தில் என்ற முன்னொட்டு ஒரு மெத்தில் (CH3) கிளை இருப்பதால் பெறப்பட்டுள்ளது.

பெண்ட்-" என்ற சொல் மூலச் சங்கிலியில் 5 கார்பன் அணுக்கள் இருப்பதாலும் பெறப்பட்டுள்ளது. ஈன் என்ற பின்னொட்டு ஐயுபிஏசி பெயரிடல் முறையின்படி மூலக்கூற்று வாய்ப்பாட்டில் ஓர் இரட்டைப் பிணைப்பு இருப்பதைக் குறிக்கிறது.[1] மெத்தில்பெண்டீனின் சாத்தியமான கட்டமைப்பு மாற்றியங்கள் பின்வருமாறு:

கட்டமைப்பு மாற்றியங்கள்
சேர்மம் கட்டமைப்பு வாய்ப்பாடு
3-மெத்தில்-1-பெண்டீன்
4-மெத்தில்-1-பெண்டீன்
2-மெத்தில்-2-பெண்டீன்
3-மெத்தில்-2-பெண்டீன்
4-மெத்தில்-2-பெண்டீன்
2-மெத்தில்-1-பெண்டீன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Basic Organic Nomenclature". www.chem.ucalgary.ca. பார்க்கப்பட்ட நாள் 2020-10-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெத்தில்பெண்டீன்&oldid=3844171" இலிருந்து மீள்விக்கப்பட்டது