மெட்ராஸ் இராணுவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெட்ராஸ் இராணுவம்
செயற் காலம்1757–1895 (மெட்ராஸ் இராணுவமாக)
1895–1908 (as the Madras Command of the Indian Army)
கிளைஇராசதானிகளின் இராணுவம்
வகைCommand
அளவு47,000 (1876)[1]
அரண்/தலைமையகம்உதகமண்டலம், நீலகிரி மாவட்டம்

மெட்ராஸ் இராணுவம் (Madras Army) என்பது பிரித்தானியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த பிரித்தானிய இந்தியாவின் மூன்று இராசதானிகளில் ஒன்றான மதராசு இராசதானியின் (மதராசு மாகாணம்) இராணுவம் ஆகும்.

1858 இந்திய அரசாங்கச் சட்டத்தின்படி ( 1857 இன் இந்தியக் கிளர்ச்சிக்குப் பின் நிறைவேற்றப்பட்டது) மூன்று இராசதானிகளும் பிரித்தானிய அரசரின் நேரடி அதிகாரத்தின் கீழ் கொண்டவரப்பட்ட காலம் வரை, இந்த இராசதானி இராணுவங்களும், இராசதானிகளைப் போலவே, கிழக்கிந்திய நிறுவனத்தைச் சேர்ந்தவையாக இருந்தன.

1895 இல் மூன்று இராசதானி இராணுவங்களும் இந்திய இராணுவத்தில் இணைக்கப்பட்டன.

உருவாக்கமும் ஆரம்பகால வரலாறும்[தொகு]

இடமிருந்து வலமாக, மதராசு குதிரை பீரங்கி, மதராசு இலகு குதிரைப்படை, மதராசு துப்பாக்கிப் படைபிரிவு, மதராசு கூளியர், மதராசு உள்ளுர் காலாட்படை, மெட்ராஸ் தாள் பீரங்கி, சு. 1830
ஒரு குதிரைப் படைவீனைக் காட்டும் ஓவியம் (சிப்பாய்க்கு சமமான குதிரைப்படை வீரன்), 6வது மதராசு இலகு குதிரைப்படை சு. 1845

கிழக்கிந்திய நிறுவனம் தன் வணிக நலன்களைப் பாதுகாக்க வேண்டி மெட்ராஸ் இராணுவத்தை உருவாக்கியது. இதில் பெரும்பாலும் பயிற்சி பெறாத வீரர்களே இருந்தனர், சிலர் வெறும் கைகளோடு இருந்தனர். 1746 இல் பிரெஞ்சு தாக்குதல் மற்றும் மதராசைக் கைப்பற்றியது போன்றவை இராணுவத்தை மேம்படுத்தவேண்டிய கட்டாயத்தை ஆங்கிலேயர்களுக்கு உருவாக்கியது. 1757 ஆம் ஆண்டில், கிழக்கிந்திய கம்பெனி நன்கு பயிற்சி பெற்ற இராணுவ அலகுகளை உருவாக்கவும், பிரதேசங்களைக் கைப்பற்றி, உள்ளூர் ஆட்சியாளர்களிடம் விசுவாசத்தைக் கோரவும் முடிவு செய்தது. [2]

உதிரியாக ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவப் பிரிவுகள் பின்னர் உள்ளூர் படைகளை வழிடத்தும் இந்திய அதிகாரிகளுடன் படைப்பிரிவுகளாக இணைக்கப்பட்டன. இந்த துருப்புக்கள் நடத்திய முதல் பெரிய தாக்குதல் நடவடிக்கைகளில் ஒன்று 1760 இல் வந்தவாசிப் போர் ஆகும். துருப்புக்கள் அவற்றின் வெற்றிக்காக மிகவும் பாராட்டப்பட்டன. அதற்கு முன்னதாக பிளாசி போருக்குப் பிறகு வரலாற்றையும் தனிப்பட்ட இடத்தைப் பிடித்த இளம் கிளைவின் தலைமையின் கீழ் இந்தப் படையில் பெரும் பகுதி வங்காளத்திற்கு அனுப்பப்பட்டது. [3]

முதலாவது மெட்ராஸ் கூளியர், சு. 1890
குயின்ஸ் ஓன் மெட்ராஸ் சாப்பர்ஸ் அண்ட் மைனர்ஸ், 1896

மெட்ராஸ் இராணுவ அதிகாரிகள் ஆரம்ப ஆண்டுகளில் வீரர்களின் உள்ளூர் பழக்கவழக்கங்கள், சாதி சடங்குகள், உடை, சமூகப் படிநிலை ஆகியவற்றில் மிகுந்த கவனத்துடன் இருந்தனர். சில முதன்மை நில உரிமையாளர்களும் மதராஸ் இராணுவத்தில் சேர்ந்தனர், அவர்களில் ஒருவர் மதுரையைச் சேர்ந்த பிரபுக்களில் ஒருவரான மூடூ (முத்து) நாயக்கர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இராணுவம் விரிவடைந்தது இதனால் பெரும்பாலும் கும்பினியைச் சேர்ந்த அதிகாரிகள் புதியதாக வந்ததால், தலைமைத்துவ பாணி மற்றும் வீர்களின் கவனிப்பு மோசமானதாக மாறியது. மதராஸ் இராணுவத்தில் மிகவும் பிரபலமான நிகழவு வேலூர் கலகம் ஆகும். திப்பு சுல்தான் கொல்லப்பட்ட பிறகு, அவரது இரண்டு மகன்களும் வேலூர்க் கோட்டையில் ஆங்கிலேயர்களால் காவலில் வைக்கப்பட்டனர். [4] 1806 ஆம் ஆண்டு சூலை 10 ஆம் நாள் இரவு வேலூர் கோட்டையின் காவல் பணியில் இருந்த மூன்று மதராசி படைப்பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் கலகத்தில் ஈடுபட்டனர். அதில் 129 பிரித்தானிய அதிகாரிகளும், வீரர்களும் கொல்லப்பட்டனர். இராணுவ மற்றும் அரசியல் குறைகளின் சேர்க்கையால் ஏற்பட்ட இந்த எழுச்சி, மெட்ராஸ் குதிரைப்படையை உள்ளடக்கிய ஒரு படையால் சில மணிநேரங்களில் ஒடுக்கப்பட்டது. [5]

1830களில் மெட்ராஸ் இராணுவம் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் குடிமை நிர்வாகத்திற்கான பணிகளில் அக்கறை கொண்டிருந்தது. இது பல இனத்தவரைக் கொண்ட இராணுவமாக இருந்தது. இதில் இருந்த பிரித்தானிய அதிகாரிகள் ஆசிய மொழிகளை கற்கவும் பேசவும் ஊக்குவிக்கப்பட்டனர். இந்த இராணுவத்தின் உயர்ந்த ஒழுக்கமும் பயிற்சியும் கொண்ட மெட்ராஸ் இராணுவம் 1832-33 இல் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏற்பட்ட ஒரு கிளர்ச்சியை அடக்கி உதவியது. [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Raugh, p. 55
  2. Schmidt, p. 26
  3. "'Plassey', the pet tiger of the Royal Madras Fusiliers, 1870". National Army Museum. Archived from the original on 6 March 2016. பார்க்கப்பட்ட நாள் 5 July 2013.
  4. "Vellore Fort – Vellore, Tamil Nadu". Express Travel World. 11 August 2012. Archived from the original on 2 December 2013. பார்க்கப்பட்ட நாள் 5 July 2013.
  5. Philip Mason, pages 240–241, A Matter of Honour – an Account of the Indian Army, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-333-41837-9
  6. Crowell, Lorenzo Mayo Jr (1982). "The Madras Army in the Northern Circars, 1832–1833, Pacification and Professionalism". Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 5 July 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்ராஸ்_இராணுவம்&oldid=3853872" இலிருந்து மீள்விக்கப்பட்டது