உள்ளடக்கத்துக்குச் செல்

மெக்சிக்கோவின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வட அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு நாடான மெக்சிக்கோவின் வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலானது. இங்கு மக்கள் வாழ்ந்த காலமானது 13,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக உள்ளது.[1] 16 ஆம் நூற்றாண்டில் எசுப்பானியர்களால் கைப்பற்றப்பட்டு காலனித்துவப்படுத்தப்படுவதற்கு முன்னர் இந்த பிராந்தியத்தில் சிக்கலான பழங்குடி நாகரிகங்கள் இருந்தன. இடையமெரிக்க நாகரிகத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்று அவர்களிடம் எழுதும் கலை(முன்கொலம்பிய காலத்தில் எழுதும் பழக்கம் அறியப்பட்ட ஒரே அமெரிக்கப் பகுதி ஆகும்) அறியப்பட்டிருந்ததே ஆகும். 1519 இல் ஸ்பெயின் வருகைக்கு முன் பல நூறு ஆண்டுகளாக முன்பிருந்தே மெக்சிகோவின் எழுத்து தொடர்பான வரலாறு நீண்டுள்ளது. ஐரோப்பியர்கள் வருகைக்கு முன்பாகவே இந்த காலகட்டமானது இசுப்பானிக் சகாப்தம் அல்லது முன்கொலம்பிய சகாப்தம் என அழைக்கப்படுகிறது.

அசுடெக்கின் தலைநகரான டெனோச்சிட்லான் இசுப்பானிய தலைநகர் மெக்சிக்கோ நகரமாக மாறியது, இதுவே மெக்சிகோவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக உள்ளது.

1521 முதல், அசுடெக் பேரரசை எசுப்பானியா கைப்பற்றி இப்பகுதியை எசுப்பானியப் பேரரசில் இணைத்தது, புதிய எசுப்பானியாவுடன் அதன் காலனித்துவ சகாப்தப் பெயரும் மெக்சிக்கோ நகரமும் காலனித்துவ ஆட்சியின் மையமாக இருந்தது. இது ஆஸ்டெக் தலைநகரான டெனோச்சிட்லானின் இடிபாடுகளில் கட்டப்பட்டு புதிய எசுப்பானியாவின் தலைநகராக மாறியது. காலனித்துவ காலத்தில், மெக்சிகோவின் நீண்டநெடுங்காலமாக கட்டமைக்கப்பட்டிருந்த மெசோஅமெரிக்க நாகரிகங்கள் ஐரோப்பிய கலாச்சாரத்துடன் கலந்தன. இத்தகைய ஒரு கலாச்சாரக் கலப்பினமான பின்னணியினை மெக்சிக்கோ மொழியினைத் தவிர வேறெதுவும் சிறப்பாப் புரிய வைக்க முடியாது: இந்த நாடு உலகில் அதிக எசுப்பானிய மொழி பேசும் மக்கள் தொகை கொண்டவர்களின் நாடாகவும், அதிக எண்ணிக்கையிலான பூர்வீக அமெரிக்க மொழி பேசுபவர்களின் தாயகமாகவும் திகழ்கிறது. மூன்று நூற்றாண்டுகளாக மெக்சிகோ எசுப்பானியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்ததோடு, அதன் மரபானது, ஒரு ஸ்பானிஷ் பேசும், கத்தோலிக்க மற்றும் பெரும்பாலும் மேற்கத்திய கலாச்சாரத்தைக் கொண்ட ஒரு நாடாகவும் இருப்பதாகும்.

சுதந்திரத்திற்கான நீடித்த போராட்டத்திற்குப் பிறகு (1810–21), புதிய எசுப்பானியா கோர்டோபா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் மெக்சிக்கோவின் இறையாண்மை கொண்ட நாடாக மாறியது. முதல் மெக்சிகன் பேரரசு என்று அழைக்கப்படும் ஒரு குறுகிய கால முடியாட்சியைத் (1821–23), தொடர்ந்து 1824 இல் ஒரு கூட்டாட்சிக்கான அரசியலமைப்பின் கீழ் மெக்சிக்கோ குடியரசு நிறுவப்பட்டது, காஸ்த்தாக்களின் முறையை ஒழித்ததன் மூலம் சட்டபப்படியான இன வகைகள் அகற்றப்பட்டன, அடிமை முறையானது 1821 இல் சுதந்திரத்தின் போதோ அல்லது 1824 இல் அரசியலமைப்பின்படியோ ஒழிக்கப்படவில்லை, ஆனால் 1829 ஆம் ஆண்டில் அகற்றப்பட்டது. மெக்ஸிகோ 1917 இன் மெக்சிகன் அரசியலமைப்பின் கீழ் ஒரு கூட்டாட்சி குடியரசாக தொடர்ந்து அமைக்கப்பட்டுள்ளது.

1846 ஆம் ஆண்டில், மெக்சிக்கன்-அமெரிக்கப் போர் அமெரிக்காவால் தூண்டப்பட்டது, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மெக்சிக்கோ குவாடலூப் ஹிடல்கோ உடன்படிக்கை மூலம் அமெரிக்காவிற்கு அதன் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட பாதியைக் கொடுத்தது. பேரழிவு தரும் தோல்விக்கு சாண்டா அண்ணா குறிப்பிடத்தக்க பொறுப்பைக் கொண்டிருந்தாலும், அவர் மீண்டும் பதவிக்கு வந்தார்.

தாராளமய சீர்திருத்தம் 1854ஆம் ஆண்டில் மெக்சிக்கன் தாராளவாதிகளால் சாண்டா அண்ணாவை அகற்றுவதன் மூலம் தொடங்கியது. 1857 ஆம் ஆண்டின் மெக்சிகன் அரசியலமைப்பு தாராளமயத்தின் கொள்கைகளை, குறிப்பாக, தேவாலயத்தையும் அரசையும் பிரித்தல், சட்டத்தின் முன் சமத்துவம், கூட்டாண்மை நிறுவனங்களுக்கு (கத்தோலிக்க திருச்சபை மற்றும் பழங்குடி சமூகங்கள்) சிறப்புத்தகுதி போன்றவற்றை சட்டப்பூர்வமாக்கியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Oldest American skull found", CNN, December 3, 2002
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெக்சிக்கோவின்_வரலாறு&oldid=2867276" இலிருந்து மீள்விக்கப்பட்டது