மூல் சந்த் மீனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூல் சந்த் மீனா
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
1992–2006
தொகுதிஇராசத்தான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1956-02-14)14 பெப்ரவரி 1956

மூல் சந்த் மீனா (Mool Chand Meena) ஒரு இந்திய அரசியல்வாதியும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் (1992-2006) ஆவார். [1]

சொந்த வாழ்க்கை[தொகு]

14 பிப்ரவரி 1956 அன்று ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள ஜீவாலி கிராமத்தில் (கங்காபூர் நகரம்) பிறந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் சட்டம் பயின்றார்.

அரசியல்[தொகு]

1970கள் மற்றும் 80களில் உள்ளூர் அரசியல் மற்றும் சமூக குழுக்களுக்கு பல நிர்வாக பதவிகளில் பணியாற்றினார். 1992 இல், 2006 இல் இந்தியாவின் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இராஜஸ்தானி பல்கலைக்கழகங்கள் மற்றும் இராஜஸ்தானை சுற்றியுள்ள பல்வேறு இளைஞர் காங்கிரசு அமைப்புகளில் பணியாற்றினார். இராஜஸ்தானில் உள்ள மாநில சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு குழுக்களில் பணிபுரிந்தார், பின்னர் பிரதேச காங்கிரசு கட்சியின் துணைத் தலைவர் வரை உயர் பதவிகளில் 2003 வரை அங்கு பணியாற்றினார். 2003 இல் துணை தலைமைக் கொறடா ஆனார். 1998 ஆம் ஆண்டில், இவர் இந்திய தேசிய காங்கிரசுகட்சியின் செயலாளராகப் பொறுப்பேற்றார். [2]

சான்றுகள்[தொகு]

  1. "Delhi Pradesh Congress Committee Website". Archived from the original on 1 July 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-07-09.
  2. "All India Congress Committee Web Site". Archived from the original on 15 July 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-07-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூல்_சந்த்_மீனா&oldid=3785698" இலிருந்து மீள்விக்கப்பட்டது