மூன்றாம் கோவிந்தராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாம் கோவிந்தராசன்
சபடலக்ச நாட்டின் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்சுமார் 1012-1026 பொ.ச
முன்னையவர்இரண்டாம் துர்லபராஜா
பின்னையவர்இரண்டாம் வாக்பதிராஜா
அரசமரபுசாகம்பரியின் சௌகான்கள்

மூன்றாம் கோவிந்தராசன் (Govindaraja III) (ஆட்சி 1012-1026 பொ), சாகம்பரியின் சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். இவர், வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய சபடலக்ச நாட்டை ஆட்சி செய்தார்.

ஆட்சி[தொகு]

மூன்றாம் கோவிந்தராசன், கந்து என்றும் அழைக்கப்படுகிறார்.[1] [2] இவரது சகோதரர் இரண்டாம் துர்லபராஜாவிற்குப் பிறகு பதவியேற்றார்.[3] பிருத்விராஜா விஜயத்தின் கூற்றுப்படி, இவரது தலைப்பு வைரி-கரட்டா ("எதிரிகளை அழிப்பவர்") என்பதாகும். [1]

மக்மூத்தின் படையெடுப்பு[தொகு]

இவரது ஆட்சியின் போது கசினியின் முஸ்லிம் ஆட்சியாளர் மகுமூது சகமான இராச்சியத்தின் மீது படையெடுத்தார் என்று பல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. கோவிந்தராசன் மக்மூத்தை தோற்கடித்ததாக 'பிரபந்த கோசம்' கூறுகிறது. [3] இந்தக் கூற்று சந்தேகத்திற்கிடமானதாக உள்ளது. ஏனெனில் இந்த வெற்றி வரலாற்று ரீதியாக மிகவும் நம்பகமானதாக இருக்கும் 'பிருத்விராஜா-விஜயம்' போன்ற முந்தைய நூல்களில் குறிப்பிடப்படவில்லை. [4]

தன்னுடன் ஒரு பகுதியாக இருந்த இந்துக் கூட்டமைப்புடன் மோதலை தவிர்க்க மக்மூத் தேர்வு செய்திருக்கலாம். 16 ஆம் நூற்றாண்டின் முஸ்லிம் வரலாற்றாசிரியர் பெரிஷ்தாவின் கூற்றுப்படி, மக்மூத் 1024 திசம்பரில் முல்தானை அடைந்தார். அங்கிருந்து, அவர் சகமான பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்த அஜ்மீருக்கு அணிவகுத்துச் சென்றார். அவர் அங்கு சென்றடைவதற்குள் நகரவாசிகள் அதை கைவிட்டுவிட்டு வெளியேறினர். மக்மூத் ஆரம்பத்தில் நகரத்தை அகற்ற விரும்பினார். ஆனால் கோட்டையை முற்றுகையிடுவது தனது நேரத்தை வீணடிக்கும் என்பதை உணர்ந்து திட்டத்தை கைவிட்டார். பின்னர் அவர் குசராத்திற்கு புறப்பட்டு சென்றார். குசராத்தைக் கைப்பற்றிய பிறகு, அவர் சிந்து வழியாக முல்தானுக்கு அணிவகுத்துச் சென்றார். ஏனெனில் இந்து ஆட்சியாளர்களின் கூட்டமைப்பு அவரை எதிர்கொள்ள ஒரு இராணுவத்தை ஏற்பாடு செய்திருந்தது. [4]

மூன்றாம் கோவிந்தராசவுக்குப் பிறகு இவரது மகன் இரண்டாம் வாக்பதிராஜா ஆட்சிக்கு வந்தார். [4]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Dasharatha Sharma 1959, ப. 34.
  2. R. V. Somani 1976, ப. 12.
  3. 3.0 3.1 R. B. Singh 1964, ப. 122.
  4. 4.0 4.1 4.2 R. B. Singh 1964, ப. 123.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_கோவிந்தராசன்&oldid=3419292" இலிருந்து மீள்விக்கப்பட்டது